ஹமாஸ் முக்கியத் தளபதி "காலி": புறக்காவல் நிலையத்தையும் கைப்பற்றிய இஸ்ரேல் இராணுவம்!
Aug 7, 2026, 10:09 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஹமாஸ் முக்கியத் தளபதி “காலி”: புறக்காவல் நிலையத்தையும் கைப்பற்றிய இஸ்ரேல் இராணுவம்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Nov 6, 2023, 06:04 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

காஸா நகரில் உள்ள ஹமாஸ் தீவிரவாதிகளின் புறக்காவல் நிலையத்தைக் கைப்பற்றிய இஸ்ரேல் இராணுவம், முக்கியத் தீவிரவாதத் தலைவர் ஒருவரும் தாக்குதலில் கொல்லப்பட்டதாகத் தெரிவித்திருக்கிறது.

இஸ்ரேல் நாட்டின் மீது காஸா நகரின் ஹமாஸ் தீவிரவாதிகள் கடந்த மாதம் 7-ம் தேதி திடீர் தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதலில் 1,400 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்ட நிலையில், 3,500 பேர் காயமடைந்தனர். இத்தாக்குதலுக்கு இஸ்ரேல் பதிலடி கொடுத்து வருகிறது. இஸ்ரேல் இராணுவத்தின் தாக்குதலில் காஸா நகரைச் சேர்ந்த பாலஸ்தீனியர்கள் 10,000-க்கும் மேற்பட்டோர் பலியாகி இருப்பதோடு, 25,000-க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருக்கிறார்கள்.

பலியானவர்களில் ஹமாஸ் தீவிரவாதிகளின் முக்கியத் தலைவர்கள், கடற்படை, விமானப்படை உள்ளிட்ட முக்கியப் படைகளின் தளபதிகள் உட்பட 500-க்கும் மேற்பட்டோர் அடக்கம். அதேபோல, இஸ்ரேல் தாக்குதலில் ஹமாஸ் தீவிரவாதிகளின் தலைமையகம், தீவிரவாத முகாம்கள், தீவிரவாதத் தலைவர்களின் வீடுகள் உட்பட 2,500 நிலைகள் அழிக்கப்பட்டதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்திருக்கிறது.

இந்த நிலையில்தான், நேற்று இரவு நடத்தப்பட்ட தாக்குதலில் 450 இலக்குகளை அழித்திருப்பதாகக் கூறியிருக்கும் இஸ்ரேல் இராணுவம், காஸாவில் உள்ள ஹமாஸ் தீவிரவாதிகளின் புறக்காவல் நிலையத்தையும் இஸ்ரேல் தரைப்படையினர் தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வந்திருப்பதாகவும் தெரிவித்திருக்கிறது.

இந்த புறக்காவல் நிலையத்தில், ஹமாஸ் தீவிரவாத அமைப்பின் கண்காணிப்பு நிலையங்கள், தீவிரவாத செயல்பாட்டாளர்களுக்கான பயிற்சி வளாகங்கள் மற்றும் சுரங்கப்பாதைகள் ஆகியவற்றைக் கொண்டிருப்பதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை தெரிவித்திருக்கிறது.

மேலும், இந்த அதிரடி நடவடிக்கையின்போது, ஹமாஸ் தீவிரவாத அமைப்பின் முக்கிய தளபதிகளில் ஒருவரான ஜமாஸ் மூசா உட்பட ஹமாஸ் தீவிரவாதிகளின் பல தளபதிகள் கொல்லப்பட்டதாகவும் தெரிவித்திருக்கிறது. கொல்லப்பட்ட ஜமால் மூசா, தீவிரவாத அமைப்பில் சிறப்புப் பாதுகாப்புப் பொறுப்பில் இருந்தவர். அதோடு, 1993-ம் ஆண்டு காஸா பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த இஸ்ரேல் பாதுகாப்புப் படைகளுக்கு எதிராக துப்பாக்கிச் சூடு நடத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: WARIsraelHamasHamas commandar killed
Share
Tweet
SendShare
Previous Post

ஆர்.எஸ்.பாரதியை கைது செய்ய வேண்டும்! – அண்ணாமலை

Next Post

சத்தீஸ்கர் முதலமைச்சர் உடனடியாக பதவி விலக வேண்டும்!

Related News

இந்தியாவுடன் மீண்டும் மோத தயாராகும் அசீம் முனீர் : சீனா, துருக்கி உதவியுடன் ட்ரோன்கள், ஏவுகணைகளை குவிக்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

பழனி கோயில் நில முறைகேடு விவகாரம் சார்பதிவாளர் – ஜஸ்டின் மணிகண்டனுக்கு 21-ம் தேதி வரை நீதிமன்ற காவல்!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் மீது நடவடிக்கை? : உரிமைக் குழு விசாரணைக்கு அனுப்ப சபாநாயகர் அறிவிப்பு!

பாகிஸ்தான், சவுதி அரேபியா, துருக்கி இடையே பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்து!

ரீல்ஸ் மோகம் மற்றும் போதைப் பொருள் புழக்கத்தால் தமிழகத்தில் பெருகும் வன்முறைக் கலாச்சாரம் – நயினார் நாகேந்திரன்

வெளிநடப்பு செய்தால், பொதுவெளியில் மன்னிப்பு கேட்க வேண்டியிருக்கும் – உள்துறை அமைச்சர் அமித் ஷா

Load More

அண்மைச் செய்திகள்

இன்றைய தங்கம் விலை!

திமுக நிர்வாகிகள் பலர் சாராய ஆலை நடத்துகின்றனர் – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

ஆதவ் அர்ஜுனா தான் எம்எல்ஏ சீட் வாங்கி கொடுத்தார் – ரகசியம் உடைத்த திமுக எம்எல்ஏ!

டாஸ்மாக் மதுபான கடையில் கூடுதல் தொகை வசூலித்தால் காவல்துறையிடம் புகார் அளிக்கலாம் – உயர் நீதிமன்றம்

தேசிய கைத்தறி தினம் – நெசவு ஆடைகளை வாங்கி, கட்சி நிர்வாகிகளுக்கு அன்பளிப்பாக வழங்கிய பாஜக நிர்வாகி!

விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றார் முதலமைச்சர் விஜய் மனைவி சங்கீதா!

சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு அஞ்சலி – அமளியில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்.பி.க்களை கடிந்து கொண்ட சிபிஆர்!

கலையும் அமெரிக்கக் கனவு – தாயகம் திரும்பும் இந்திய அமெரிக்கர்கள் – காரணம் என்ன? : சிறப்பு தொகுப்பு!

பிரதமர் மோடி குறித்து அவதூறு பேச்சு – பியூஸ் மானுஷ் மீது வழக்குப் பதிவு!

கர்நாடக அணைகள் நிரம்பியதால் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்படுகிறது – சட்டப்பேரவையில் இபிஎஸ் பேச்சு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies