சத்தீஸ்கர் முதலமைச்சர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என முன்னாள் முதலமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான ராமன் சிங் வலியுறுத்தியுள்ளார்.
சத்தீஸ்கரில் முதற்கட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெறுகிறது. மொத்தமுள்ள 90 தொகுதிகளில் முதற்கட்டமாக 20 தொகுதிகளுக்கு நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்நிலையில், மகாதேவ் சூதாட்ட செயலி உரிமையாளர்களிடம் இருந்து சத்தீஸ்கா் முதல்வா் பூபேஷ் பகேலுக்கு சுமார் ரூ.508 கோடி கைமாறியிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதுதொடர்பாக பாஜக மூத்த தலைவர் ராமன் சிங் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார். மகாதேவவ் செயலி முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணையை முதலமைச்சர் பூபேஷ் பகேலு எதிர்கொண்டு வருவதாகவும், எனவே தார்மீக அடிப்படையில் முதல்வர் பதவியை வகிக்க அவர் தகுதியற்றவர் ஆகிவிட்டதாகவும் அவர் கூறினார்.
எனவே முதலமைச்சர் பதவியில் இருந்து அவர் உடனடியாக பதவி விலக வேண்டும் என ராமன் சிங் வலியுறுத்தினார்.