கடந்த 2006-ம் ஆண்டில் தொடங்கப்பட்டதுதான் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா. இந்த அமைப்புக்கு நாடு முழுவதும் 24 மாநிலங்களில் கிளைகள் உள்ளன. நாட்டில் முக்கிய கலவரங்கள், படுகொலைகளில் இதன் நிர்வாகிகளுக்குத் தொடர்பு உள்ளதாகப் புகார் எழுந்தது.
இதனால், தமிழகம் உள்பட நாடு முழுவதும் 15 மாநிலங்களில் என்ஐஏ, அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த 2022-ம் ஆண்டு திடீர் சோதனை நடத்தி, 45 பேரைக் கைது செய்தனர். முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றினர்.
மேலும், பிஎஃப்ஐ அமைப்பு வங்கிகளில் ரூ.120 கோடி டெபாசிட் செய்துள்ளதைக் கண்டறிந்தனர். இந்த பணம் வளைகுடா நாடுகளில் இருந்து ஹவாலா முறையில் கொண்டு வந்ததும் விசாரணையில் உறுதி செய்தனர்.
இதனையடுத்து, சட்ட விரோத செயல்பாடுகள் காரணமாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கு 5 ஆண்டுகள் தடை விதித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது. இந்த தடையைக் கடந்த மார்ச் மாதம் சட்ட விரோத தடுப்பு தீர்ப்பாயம் உறுதி செய்தது.
இந்த தடைக்கு எதிராக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா உச்ச நீதிமன்றத்தை நாடியது. ஆனால், மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதனால், உச்ச நீதிமன்றத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மூக்குடைப்பட்டது. அதன் உண்மையான முகம் அம்பலத்திற்கு வந்துள்ளது.