வாக்குரிமையைப் பயன்படுத்தி ஜனநாயகதத்தை வலுப்படுத்த வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.
மிசோராம் மாநிலத்தில் மொத்தமுள்ள 40 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
பாஜக , ஆளும் தேசிய முன்னணி, ஜோரம் மக்கள் முன்னணி, காங்கிரஸ், உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த 174 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.
பொதுமக்கள் நீண்ட வரிசைகளில் நின்று ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர். இதேபோல் சத்தீஸ்கர் மாநிலத்தில் 20 தொகுதிகளுக்கு முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
I call upon the people of Mizoram to vote in record numbers. I particularly urge the young and first time voters to exercise their franchise and strengthen the festival of democracy.
— Narendra Modi (@narendramodi) November 7, 2023
இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், மிசோரம் மக்கள் சாதனை எண்ணிக்கையில் வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார். குறிப்பாக இளைஞர்கள் மற்றும் முதல்முறை வாக்காளர்கள் தங்கள் வாக்குரிமையைப் பயன்படுத்தி ஜனநாயகத்தின் திருவிழாவை வலுப்படுத்துமாறும் பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.