தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினத்தின் வரலாறு மற்றும் முக்கியத்துவம் குறித்துப் பார்ப்போம்.
புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்து, குணப்படுத்துவதை வலியுறுத்தும் நோக்கில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் 7-ஆம் தேதி, நாடு முழுவதும் ‘தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்’ கடைப்பிடிக்கப்படுகிறது. 2014-ஆம் ஆண்டு அப்போதைய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் முதன் முதலில் தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினத்தை அறிவித்தார்.
உலக அளவில் ஒவ்வொரு ஆண்டும் ‘உலக புற்றுநோய் தினம்’ பிப்ரவரி 4-ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, மக்கள் மத்தியில் மரணத்தை ஏற்படுத்தும் இரண்டாவது கொடிய நோயாகப் புற்றுநோய் உள்ளது.
இந்தியாவில் பெண்களைப் பாதிக்கும் நோய்களின் பட்டியலில் மார்பக புற்றுநோய் முதன்மையாக இருக்கிறது. இதை பரிசோதனை செய்து கண்டறியும் முறை மிகவும் எளிதானது. தொடக்க நிலையில் கண்டறியும்போது
மருந்துகள் மற்றும் வாழ்வியல் மாற்றங்களின் மூலம் புற்றுநோயிலிருந்து மீண்டு வர முடியும்.
புற்றுநோய் நோய் தொடர்பாக மக்கள் மத்தியில் விழிப்புணர்வை அதிகப்படுத்தவும் மற்றும் நடவடிக்கை எடுக்கவும் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.