தலித்துகள் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை மையமாக கொண்டு புதிய கூட்டணி அமைக்கப்படும் என சமாஸ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதங் அறிவித்துள்ளது இண்டி கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேச மாநில சட்டசபை தேர்தல் நவம்பர் 17-ந்தேதி நடைபெறுகிறது. இதையொட்டி டாமோவில் நேற்று சமாஜ்வாடி கட்சி சார்பாக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அக்கட்சி தலைவர் அகிலேஷ்யாதவ் பங்கேற்று உரையாற்றினார். அப்போது வரவிருக்கும் மாநிலத் தேர்தலிலும் எதிர்க்கட்சிகளின் கூட்டணி என்று நான் தவறாக நினைத்துவிட்டேன்.
இந்த தேர்தலில் கூட்டணி கட்சியாக போட்டியிட காங்கிரஸ் விரும்பவில்லை என தெரிகிறது.எங்கள் கட்சியை (எஸ்.பி.) பொறுத்த வரையில், மத்திய பிரதேச மக்கள் எங்களுக்கு ஆதரவளிப்பார்கள் என்றும், கடந்த தேர்தலை விட அதிக இடங்களில் வெற்றி பெறுவோம் என்றும் நம்புவதாக அவர் கூறினார்.
தேர்தல் நடைபெறும் பல மாநிலங்களில் ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று காங்கிரஸ் கட்சி அளித்த வாக்குறுதியை அவர் கடுமையாக விமர்சித்தார். மண்டல் கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்துவதில் உள்ள இடையூறுகள், ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு பற்றி காங்கிரஸ் பேசுவது நகைச்சுவையாக உள்ளதாகவும் அவர் கூறினார்.
சமாஜ்வாடி கட்சியை அதன் கூட்டணியாக காங்கிரஸ் ஏற்கவில்லை. அவர்கள் ஆம் ஆத்மி கட்சிக்கு எதிராக பேசி வருகின்றனர். சிறிய கட்சிகளுடன் கூட்டணி வைத்து முன்ன றும் வாய்ப்பு காங்கிரசுக்கு கிடைத்தாலும், அவர்கள் மதிக்கவில்லை என்றும் அவர் கூறினார்.
எனவே இன்றைய சூழலில் நாட்டுக்கு புதிய சித்தாந்தம், புதிய கட்சி மற்றும் புதிய கூட்டணி தேவை. இதற்காக புதிய கூட்டணி(பி.டி.ஏ.) அமைக்க உள்ளோம் என்று அகிலேஷ் யாதவ் குறிப்பிட்டார்.
காங்கிரஸ், தி.மு.க. உள்ளடக்கிய இண்டி கூட்டணியில் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி கட்சியும் உள்ளது. சமீப காலமாக சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் இந்தியா கூட்டணியை சாடி வருகிறார். காங்கிரஸ் கட்சிக்கு எதிரான கருத்துகளை அவர் பேசி வருவது இண்டி கூட்டணியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.