அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள பூடான் அரசா் ஜிக்மே கேசா் நம்கியால் வாங்சுக், பிரதமா் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினாா்.
8 நாள் அரசு முறை பயணமாக பூடான் பிரதமர் அரசர் இந்தியா வந்துள்ளார். முதல்கட்டமாக அசாமில் 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அவர், டெல்லி வந்தடைந்தார். அவரை வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் வரவேற்றார்.
இதனைத்தொடர்ந்து அவருடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
பின்னர் நேற்று பிரதமர் மோடியை ஜிக்மே கேசா் நம்கியால் வாங்சுக் சந்தித்து பேசினார்.
இதுதொடர்பாக பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,பூட்டான் மன்னர் ஜிக்மே கேசர் நாம்கேல் வாங்சுக்கை இந்தியாவிற்கு வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். தனித்துவமான மற்றும் முன்மாதிரியான இந்தியா-பூடான் உறவின் பல்வேறு அம்சங்கள் குறித்து நாங்கள் விவாதங்களை நடத்தினோம் என தெரிவித்துள்ளார்.
மேலும் பூடானில் நடைபெற்று வரும் சீா்திருத்த நடவடிக்கைகள் பற்றிய கருத்துகளை அரசா் வாங்சுக் பிரதமருடன் பகிா்ந்து கொண்டாா். பூடானின் வளா்ச்சிக்கு இந்தியாவின் ஆதரவுக்கும் அவா் நன்றி தெரிவித்தாா்.