காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்துவது அனைவரின் கடமை என உச்ச நீதிமன்றம் பட்டாசு தொடர்பான உத்தரவில் தெரிவித்துள்ளது. பண்டிகைக் காலங்களில் பட்டாசு வெடிப்பது தொடர்பான முந்தைய உத்தரவைப் பின்பற்றுமாறு ராஜஸ்தான் மற்றும் பிற மாநிலங்களுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
ராஜஸ்தான் மாநில பட்டாசு தொடர்பான வழக்கு இன்று உச்ச நீதிமன்ற நீதிபதி ஏ.எஸ்.போபண்ணா, எம்.எம்.சுந்தரேஷ் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது வழக்கறிஞர்களில் ஒருவர், முந்தைய உத்தரவுகளுக்கு இணங்க உத்தரவு பிறப்பிக்குமாறு நீதிமன்றத்தை வலியுறுத்தினார்.
நீதிமன்றத்தின் முந்தைய உத்தரவு டெல்லி தேசிய தலைநகர் பகுதிக்கும் பொருந்தும் என்று வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்தார். இந்தியா முழுவதும் பட்டாசு வெடிக்க தடை விதிக்க வேண்டும் என்று வழக்கறிஞர் கோரியிருந்தார்.
அப்போது மாசுபாட்டைக் கட்டுப்படுத்துவது ஒவ்வொருவரின் கடமை என நீதிபதிகள் குறிப்பிட்டனர். குறைவான பட்டாசுகளுடன் தீபாவளி சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக கொண்டாடப்படுவதை ஒவ்வொரு குடிமகனும் பார்க்க வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
இந்த நாட்களில் பள்ளி மாணவர்களை விட பெரியவர்கள் அதிக பட்டாசுகளை வெடிக்கிறார்கள் என நீதிபதிகள் கூறினர். மேலும் உதய்பூரில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு ராஜஸ்தான் அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
2021 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் பட்டாசுகளைப் பயன்படுத்துவதற்கு எந்தவிதமான தடையும் இல்லை என்றும் பேரியம் உப்புகள் கொண்ட பட்டாசுகள் மட்டுமே தடைசெய்யப்பட்டுள்ளது என்றும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியது. குறிப்பிடத்தக்கது.