பெங்களூரு உள்ளிட்ட தெற்கு கர்நாடகா மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) தெரிவித்துள்ளது. மேலும் ‘மஞ்சள் எச்சரிக்கை’ விடுக்கப்பட்டுள்ளது.
பெங்களூரில் கடந்த இரண்டு நாட்களாக பெய்து வரும் மழையின் காரணமாக இயல்பு வாழ்க்கை முடங்கியது, சாலைகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்கள் வெளியே செல்ல முடியாமல் திணறினர்.
மேலும் நேற்று ஒரே இரவில் பெய்த கனமழையால் நகரின் பல பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. மேலும் பல வாகனங்கள் வெள்ளத்தில் மூழ்கிய சாலைகளில் சிக்கிக்கொண்டன. வர்த்தக நிலையங்கள் மற்றும் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. மேலும் சங்கர் நகர் பகுதியில் உள்ள வர்த்தக நிலையத்தில் தேங்கி இருக்கும் மழை நீரை பம்ப் செட் மூலம் அகற்றும் காட்சி சமூக வலைதளத்தில் பகிரப்பட்டுள்ளது.
இந்நிலையில் அடுத்த 3 நாட்களுக்கு பெங்களூரு உள்ளிட்ட தெற்கு கர்நாடக மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) ‘மஞ்சள் எச்சரிக்கை’ எச்சரிக்கை விடுத்துள்ளது.
கர்நாடகாவில் 54 சதவீத மழைப் பற்றாக்குறையும், தெற்கு உள் கர்நாடகத்தில் 43 சதவீதப் பற்றாக்குறையும் காணப்பட்டாலும், அடுத்த 3-5 நாட்களுக்கு கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.