ஹேப்பி ஸ்ட்ரீட் கொண்டாட்டத்திற்கு பெரும்பாலான பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
சென்னை, கோயம்புத்தூர்,திருச்சி தஞ்சாவூர் உள்ளிட்ட சில மாவட்டங்களில் மாநகராட்சி சார்பாக ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சியை ஞாயிற்றுக்கிழமைகளில் தமிழ்நாடு அரசு நடத்தி வருகிறது. ஆனால் இதற்கு தமிழகம் முழுவதும் பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ஏற்கனவே மதுரை உள்ளிட்ட நகரங்களில் ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சியில் சில பிரச்சினைகள் ஏற்பட்டது.இது குறித்து பொதுமக்கள் தெரிவித்த கருத்துக்களை பார்ப்போம்.
இது தேவையில்லாத வேலை. இளைஞர்களுக்கு தற்போது வேண்டுமானால் இது மகிழ்ச்சியாக இருக்கலாம் ஆனால் இது தொடர்ந்தால் தேவையில்லாத பல பிரச்சனைகள் வரும். வேலையில்லாதவர்களுக்கு வேலை தரலாம்,அடிப்படை வசதிகள் இல்லா கிராமங்களுக்கு செய்ய வேண்டிய கடமையை அரசு செய்யலாம் இது தேவையா என கேள்வி எழுப்பியுள்ளனர்.
ஆண்களும், பெண்களும் சாலையில் ஆடுவதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும், ஆண்டில் ஒருநாள் என்றால் கூட பரவாயில்லை, ஆனால் வாரம் வாரம் என்பது ஒரு வித போதையாக மாறி விடும் சமூக சீரழிவை ஏற்படுத்தும் இந்த நிகழ்ச்சிக்கு உடனடியாக தடை விதிக்க வேண்டும். மக்கள் நலத்திட்டங்கள், அடிப்படை கட்டமைப்பு பணிகளில் கவனம் செலுத்தாமல் இதுபோன்ற நிகழ்வுகளில் அரசு கவனம் செலுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது.