தூத்துக்குடி கடல் பகுதியில், திடீரென கடல் நீர் பச்சை நிறமாக மாறியுள்ளதால், அப்பகுதி மீனவர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
தூத்துக்குடி கடல் பகுதி வழக்கத்திற்கு மாறாகத் துர்நாற்றமும் வீசி வருவதாலும், திடீரென கடல் நீர் பச்சை நிறமாக மாறியுள்ளது.
மேலும், இந்த பகுதியில் எழும்பும் கடல் அலைகள், தற்போது பச்சை நிறத்தில் காணப்படுகிறது. நுரையுடன் கரையில் மோதி செல்கிறது.
கடலில் உள்ள பூங்கோரை பாசிகளால் கடல் நீர் பச்சை நிறமாகக் காட்சியளிக்கும் என்றும், இதனால் சிறிய வகை மீன்களின் செதில்கள் பாதிப்படைந்து உயிரிழக்கக் கூடும் என்றும் கடல் ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ஆனால், தூத்துக்குடி போன்ற பகுதிகளில், இது போன்ற பாசிகள் வர அதிக வாய்ப்புகள் இல்லை என்பதால், தற்போது கடல் நீர் பச்சை நிறமாக மாற பூங்கோரை பாசிகள் தான் காரணமா? அல்லது ரசாயன கழிவுகள் கலப்பு காரணமா? என மீன்வளத்துறையினர் ஆய்வு செய்ய வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதனிடையே, தூத்துக்குடி கடல் பகுதியில் நூற்றுக்கணக்கான மீன்கள் செத்து ஒதுங்குவதால் மீனவர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.