நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட நேபாளத்திற்கு இந்தியா இரண்டாவது கட்டமாக மருந்து மற்றும் நிவாரணப் பொருட்களை அனுப்பியுள்ளது.
.நேபாளத்தின் கர்னாலி மாகாணம் ஜாஜர்கோட் பகுதியில் நள்ளிரவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆகப் பதிவானது. பூமிக்கு அடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் நேபாளத்தின் ஜாஜர்கோட், ரூகம் மாவட்டங்களில் பேரழிவு ஏற்பட்டது. இரு மாவட்டங்களிலும் வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள் இடிந்து விழுந்தன. நிலநடுக்கத்திற்கு 150க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
இதனைத்தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமையும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த டெல்லி மற்றும் அண்டை மாநிலங்களில் உணரப்பட்டன. இந்நிலையில் 9 டன் மதிப்புள்ள அவசர நிவாரண உதவிகளை ஏற்றிக்கொண்டு இரண்டாவது விமானம் நேபாளத்தில் தரையிறங்கியது.
இந்த கடினமான நேரத்தில் நேபாளத்திற்கான இந்தியாவின் ஆதரவு வலுவாகவும் உறுதியாகவும் உள்ளதாக என்று வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.