உலகளாவிய தொழிநுட்பம், பொருளாதாரம், சமூக அபிவிருத்திகளுக்கு ஏற்ப கல்வி முறை இருக்க வேண்டும்! - குடியரசுத்தலைவர்
Sep 12, 2026, 07:09 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உலகளாவிய தொழிநுட்பம், பொருளாதாரம், சமூக அபிவிருத்திகளுக்கு ஏற்ப கல்வி முறை இருக்க வேண்டும்! – குடியரசுத்தலைவர்

Murugesan M by Murugesan M
Nov 7, 2023, 07:57 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கோவிந்த் வல்லப் பந்த் வேளாண்மை மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் 35 வது பட்டமளிப்பு விழாவில் குடியரசுத்தலைவர் பங்கேற்றார்.

உத்தராகண்ட் மாநிலம் பந்த்நகரில் உள்ள கோவிந்த் வல்லப் பந்த் வேளாண்மை மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் 35-வது பட்டமளிப்பு விழாவில் குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு இன்று கலந்து கொண்டு    உரையாற்றினார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத்தலைவர், நாட்டில் விவசாயக் கல்வி மற்றும் விவசாயத் துறையின் வளர்ச்சியை மேம்படுத்துவதற்காக கோவிந்த் வல்லப் பந்த் வேளாண்மை மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் நிறுவப்பட்டது என்றார் .

தொடக்கத்தில் இருந்து, இது விவசாயக் கல்வி, ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிக்கான சிறந்த மையமாக மாறியுள்ளது. 11,000 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த கல்வி நிறுவனம் உலகின் மிகப்பெரிய பல்கலைக்கழகங்களில் ஒன்றாகும் என்று குறிப்பிட்டார்.

நோபல் பரிசு பெற்ற டாக்டர் நார்மன் போர்லாக், பந்த்நகர் பல்கலைக்கழகத்தை ‘பசுமைப் புரட்சியின் முன்னோடி’ என்று குறிப்பிட்டார் என்று கூறினார்.

நார்மன் போர்லாக் உருவாக்கிய மெக்சிகன் கோதுமை வகைகள் இந்த பல்கலைக்கழகத்தில் பரிசோதிக்கப்பட்டன. பசுமைப் புரட்சியின் வெற்றியில் முக்கியப் பங்காற்றியுள்ளது. விவசாயத் துறையுடன் தொடர்புடைய அனைவருக்கும் ‘பந்த்நகர் விதைகள்’ பற்றித் தெரியும்.

பந்த்நகர் பல்கலைக்கழகத்தில் உருவாக்கப்பட்ட விதைகள் நாடு முழுவதும் உள்ள விவசாயிகளால் பயிர் தரம் மற்றும் மகசூலை அதிகரிக்க பயன்படுத்தப்படுகின்றன. நாட்டின் விவசாயத் துறையின் வளர்ச்சியில் பந்த்நகர் பல்கலைக்கழகம் தொடர்ந்து முக்கியப் பங்கு வகிக்கும் என்று தெரிவித்தார்.

விவசாய அபிவிருத்திக்கு விவசாயத் துறையில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஆராய்ச்சிகளை விவசாயிகளிடம் கொண்டு சேர்ப்பது அவசியம் என குறிப்பிட்டார். இப்பல்கலைக்கழகம் பல்வேறு தட்பவெப்பநிலையை தாங்கும் தொழில்நுட்பங்கள் மூலம் கிராமப்புற சமூகத்திற்கு உதவுவதாக தெரிவித்தார்.

உலகளாவிய தொழிநுட்பம், பொருளாதாரம் மற்றும் சமூக அபிவிருத்திகளுக்கு ஏற்ப கல்வி முறை இருக்க வேண்டும் என தெரிவித்தார். வேலைவாய்ப்பை உருவாக்கக்கூடிய மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த உலகில் போட்டியிடக்கூடிய தொழில்துறைக்கு தயாராக உள்ள பட்டதாரிகளை கல்வி நிறுவனங்கள் உருவாக்க வேண்டும் என்று கூறினார்.

காலநிலை மாற்றம் மற்றும் மண் சீரழிவு போன்ற பிரச்சினைகளை சமாளிக்க இன்று உலகம்  இயற்கை விவசாயத்தை நோக்கி நகர்ந்து வருவதாக குறிப்பிட்டார். சுற்றுச்சூழலுக்கு உகந்த உணவுப் பழக்கமும் ஊக்குவிக்கப்படுகிறது.

நமது உணவுப் பழக்கத்தில் சிறுதானியங்களுக்கு முன்னுரிமை அளிப்பதில் இந்த பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள், விஞ்ஞானிகள் மற்றும் பேராசிரியர்கள் முக்கியப் பங்கு வகிப்பார்கள் என்று கூறினார்.

உலகளாவிய சவால்களை எதிர்கொள்வதற்கு நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது அவசியம் என்று குடியரசுத்தலைவர் வலியுறுத்தினார். பயிர் மேலாண்மை, நானோ தொழில்நுட்பம், இயற்கை விவசாயம் போன்றவற்றின் மூலம் விவசாயத்தில் டிஜிட்டல் தீர்வுகளை அறிமுகப்படுத்தியதற்காக பந்த்நகர் பல்கலைக்கழகத்தை பாராட்டினார்.

செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்த பல்கலைக்கழகம் நடவடிக்கை எடுத்து வருவதாக குறிப்பிட்டார். சில நிமிடங்களில் பல ஹெக்டேர் நிலத்தில் தெளிக்கக்கூடிய விவசாய ட்ரோனை பல்கலைக்கழகத்துக்கு என சொந்தமாக பல்கலைக்கழக விஞ்ஞானிகள் உருவாக்கி உள்ளனர். ட்ரோன் தொழில்நுட்பத்தின் நன்மைகள் விரைவில் விவசாயிகளை சென்றடையும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

Tags: President Droupadi Murmu
Share
Tweet
SendShare
Previous Post

வேத காலத்தில் தீபாவளி பண்டிகை

Next Post

நேபாளத்திற்கு இரண்டாவது கட்ட நிவாரண பொருட்கள்!

Related News

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

Load More

அண்மைச் செய்திகள்

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies