இன்று பிறந்த நாள் கொண்டாடும் பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானிக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி இன்று தனது 97வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவருக்கு வாழ்த்து தெரிவித்து பிரதமர் நரேந்திர மோடி எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், ஸ்ரீ எல்.கே அத்வானி ஜி அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்றும், அவர் ஒருமைப்பாடு மற்றும் அர்ப்பணிப்பின் ஒரு கலங்கரை விளக்கமாக விளங்குவதாக கூறியுள்ளார்.
அவர் நமது தேசத்தை வலுப்படுத்தியதில் மகத்தான பங்களிப்பைச் செய்துள்ளார். அவரது தொலைநோக்கு தலைமை, தேசிய முன்னேற்றத்தையும் ஒற்றுமையையும் மேம்படுத்தியுள்ளது. அவர் நல்ல ஆரோக்கியத்துடன் நீண்ட ஆயுளுடன் வாழ வாழ்த்துகிறேன் என்று கூறியுள்ளார்.
தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கான அவரது முயற்சிகள் 140 கோடி இந்தியர்களுக்கு தொடர்ந்து ஊக்கமளிப்பதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.