மேதகு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் நேர்மையான, உறுதியான நிலைப்பாடு காரணமாக, அரசியல் செய்யமுடியாததால், தோற்றுப்போன அமைச்சர் பொன்முடி, பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்துள்ளார் என கூறப்படுகிறது.
தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகம் சார்பில் 8-ம் தேதி புதன்கிழமை காலை 11 மணிக்கு, சென்னை சைதாப்பேட்டையில் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள கல்விப்புல கட்டிடத்தில், மாணவர்களுக்குப் பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
இந்த விழாவில் தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் வேந்தரும், தமிழக ஆளுநருமான ஆர்.என்.ரவி தலைமையேற்றுப் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு, மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.
அதேபோல இந்த விழாவில் தமிழ்நாடு உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடியும் கலந்து கொள்வார் என அறிவிக்கப்பட்டு அதற்கான அழைப்பிதழ்களும் தயார் அனைவருக்கும் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னை சைதாப்பேட்டையில் நடக்கும் தமிழ்நாடு திறந்தவெளி பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை அமைச்சர் பொன்முடி திட்டமிட்டே புறக்கணித்துள்ளார். இதேபோல, உயர் கல்வித்துறை செயலாளரும் கலந்துகொள்ளவில்லை என கூறப்படுகிறது.
ஏற்கனவே, மதுரை காமராஜர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை அமைச்சர் பொன்முடி புறக்கணித்து இருந்த நிலையில் தற்போது தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக விழாவையும் புறக்கணித்துள்ளார்.
உயர் நிலைத்துறை அமைச்சராக இருந்துகொண்டு மாணவர்களுக்கு வழங்கும் பட்டமளிப்பு விழாவை அமைச்சர் பொன்முடி புறக்கணிப்பது கடும் கண்டனத்துக்குரியது என்றும், அவர் தனது கடைமையை செய்யத் தவறிவிட்டார் என்றும் மாணவர்களும், கல்வியாளர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
மேலும், தனது கடைமையை செய்ய தவறிய அமைச்சர் பொன்முடி பதவி விலக வேண்டும் என மாணவர்கள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் அவரது அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தவும் முடிவு செய்துள்ளனர் தகவல் வெளியாகியுள்ளது.