ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இன்றையப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு.
ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றையப் போட்டியில் நெதர்லாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் விளையாடவுள்ளன.
ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்றையப் போட்டி புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெறுகிறது.
இன்றையப் போட்டியில் இங்கிலாந்து மற்றும் நெதர்லாந்து அணிகள் விளையாடுகிறது. இதில் டாஸ் இங்கிலாந்து அணியின் கேப்டன் பட்லர் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
இங்கிலாந்து அணியின் வீரர்கள் :
ஜானி பேர்ஸ்டோவ், டேவிட் மாலன், ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர் (கேப்டன்), மொயின் அலி, லியாம் லிவிங்ஸ்டோன், கிறிஸ் வோக்ஸ், டேவிட் வில்லி, அடில் ரஷித், மார்க் வூட்
நெதர்லாந்து அணியின் வீரர்கள் :
வெஸ்லி பாரேசி, மேக்ஸ் ஓடோவ்ட், கொலின் அக்கர்மேன், சைப்ராண்ட் ஏங்கல்பிரெக்ட், ஸ்காட் எட்வர்ட்ஸ் (கேப்டன்), பாஸ் டி லீட், சாகிப் சுல்பிகர், லோகன் வான் பீக், ரோலோஃப் வான் டெர் மெர்வே, ஆர்யன் தட், பால் வான் மீகெரென்