கலகலப்பு என்ற திரைப்படத்தில் படத்தில், தேர்தலில் வாக்கு கேட்கும் கட்சி நிர்வாகி ஒருவரின் தோட்டத்தில், பூமிக்கு அடியில் தண்ணீருக்கு பதில் மது வருமோ, அதுபோல் உத்தபிரதேம் மாநிலத்தில், கை பம்பில் அடித்தால், தண்ணீருக்குப் பதிலாக மது பீறிட்டு வந்துள்ளது.
மௌரானிபூர் அடுத்துள்ள பசாரியா தேர்வில், கள்ளச்சாராயம் தயாரித்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தன் பேரில், கலால் அதிரடியாகச் சென்று சோதனை நடத்தினர்.
அப்போது, தேர்வில் உள்ள வீடுகள், வயல்வெளிகள் என அனைத்து இடங்களிலும் கள்ளச் சாராய மதுபானம் தயாரிக்கும் பெரியபெரிய ஆலைகள் இடித்துத்தள்ளினர். பின்னர், சந்தேகத்திற்கு இடமான வகையில் ஒரு அடி பம்பு அங்கு இருந்தது. அதனை அடித்துப் பார்த்தபோது, அதில் தண்ணீருக்குப் பதில் சாராயம் வந்தது.
அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் விசாரணை செய்த போது, பூமிக்கு அடியில் நீர்த்தேக்க தொட்டி அமைத்து வெளியே அடி பம்பு ஒன்றை உருவாக்கி உள்ளே மதுவைச் சேமித்து வைத்து, பின்னர், அடி பம்ப் மூலம் மது விற்பனை செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, புல்டோசர் உதவியோடு கள்ளச்சாராய அடி பைப்பை இடித்துத் தள்ளினர்.
யார் தவறு செய்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது உ.பி. அரசு. அதற்கு இந்த நிகழ்ச்சியே ஒரு சாட்சி என்கின்றனர் காவல்துறையினர்.