இங்கிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்கள் இழப்பிற்கு 339 ரன்கள் எடுத்துள்ளது.
ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றையப் போட்டியில் நெதர்லாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் விளையாடவுள்ளன.
ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்றையப் போட்டி புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெறுகிறது.
இன்றையப் போட்டியில் இங்கிலாந்து மற்றும் நெதர்லாந்து அணிகள் விளையாடுகிறது. இதில் டாஸ் இங்கிலாந்து அணியின் கேப்டன் பட்லர் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக ஜானி பேர்ஸ்டோவ் மற்றும் டேவிட் மாலன் களமிறங்கினர். இதில் ஜானி பேர்ஸ்டோவ் 17 பந்துகளில் 15 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து களமிறங்கிய ஜோ ரூட் 28 ரன்களில் ஆட்டமிழந்தார்.
பின்னர் சிறப்பாக விளையாடி வந்த டேவிட் மாலன் 10 பௌண்டரீஸ் மற்றும் 2 சிக்சர்கள் என அடித்து மொத்தமாக 74 பந்துகளில் 87 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.
இவரைத் தொடர்ந்து களமிறங்கிய பென் ஸ்டோக்ஸ் சிறப்பாக விளையாடி சதம் அடித்து ஆட்டமிழந்தார். பென் ஸ்டோக்ஸ் மொத்தமாக 6 பௌண்டரீஸ் மற்றும் 6 சிக்சர்கள் என 84 பந்துகளில் 108 ரன்களை அடித்து ஆட்டமிழந்தார்.
இவரைத் தொடர்ந்து களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க கிறிஸ் வோக்ஸ் அரைசதம் விளாசினார். 5 பௌண்டரீஸ் மற்றும் 1 சிக்சர் என மொத்தமாக 45 பந்துகளில் 51 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.
இதனால் இங்கிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்கள் இழப்பிற்கு 339 ரன்கள் எடுத்துள்ளது.
நெதர்லாந்து அணியின் அதிகபட்சமாக பாஸ் டி லீடே 3 விக்கெட்களும், லோகன் வான் பீக் 2 விக்கெட்களும், ஆர்யன் தத் 2 விக்கெட்களும், பால் வான் மீகெரென் 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதனால் நெதர்லாந்து அணி வெற்றி பெற 340 ரன்கள் இலக்காக உள்ளது.