ஹேமாவதி நந்தன் பகுகுணா கர்வால் பல்கலைக்கழகத்தின் 11-வது பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் பங்கேற்றார்.
ஸ்ரீநகரில் (கார்வால்) உள்ள ஹேமாவதி நந்தன் பகுகுணா கர்வால் பல்கலைக்கழகத்தின் 11-வது பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று கலந்து கொண்டு உரையாற்றினார்.
அப்போது பேசிய குடியரசுத் தலைவர், இந்த பல்கலைக்கழகத்தை நிறுவியதில் மக்கள் இயக்கம் பெரும் பங்காற்றியுள்ளது என குறிப்பிட்டார்.
ஹேமாவதி நந்தன் பகுகுணா பல்கலைக்கழகம் 1973-ம் ஆண்டில் நிறுவப்பட்டதிலிருந்து, காலத்திற்கேற்ப தன்னை மாற்றிக் கொண்டுள்ளது. இன்று, பெண்கள் தலைமையிலான வளர்ச்சியை நோக்கி நாம் நகர்ந்து கொண்டிருக்கும் போது, 11-வது பட்டமளிப்பு விழாவில் “அதிகாரமளிக்கப்பட்ட பெண்கள், வளமான நாடு” என்ற கருப்பொருள், இந்த பல்கலைக்கழகத்தின் முற்போக்கான சிந்தனையைப் பிரதிபலிக்கிறது என்று கூறினார்.
உத்தரகாண்ட் மக்கள் எப்போதும் கல்விக்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றனர் என்று கூறினார். மாநிலத்தின் கல்வியறிவு விகிதத்திலும் கல்வி மீதான மக்களின் ஆர்வம் பிரதிபலிக்கிறது என்றும், இது தேசிய சராசரியை விட சிறப்பாக உள்ளது என்றும் அவர் கூறினார்.
சுமித்ரானந்தன் பந்த் முதல் மனோகர் ஷியாம் ஜோஷி, ஷிவானி, ஹிமான்ஷு ஜோஷி மற்றும் மங்லேஷ் தப்ரால் வரை இந்தி இலக்கியத்திற்கு பல சிறந்த திறமைகளை இந்தப் பிராந்தியம் வழங்கியுள்ளது என்று கூறினார்.
உத்தரகண்ட் மிகவும் சுற்றுச்சூழல் உணர்திறன் கொண்ட மாநிலம் என்று கூறினார். நிலையான வளர்ச்சி மற்றும் வளங்களின் உகந்த பயன்பாட்டிற்கு – ஆராய்ச்சி மற்றும் புதிய கண்டுபிடிப்புகள் தேவை என்று கூறினார்.
உள்ளூர் தேவைகள் மற்றும் கட்டுப்பாடுகளை மனதில் கொண்டு பொருளாதார வளர்ச்சியை அடைவதும், வேலை வாய்ப்புகளை உருவாக்குவதும் ஒரு சவாலாகவும், வாய்ப்பாகவும் உள்ளது என்று கூறினார்.
இந்த மாநிலத்தின் ஒரே மத்திய பல்கலைக்கழகம் என்பதால், ஹேமாவதி நந்தன் பகுகுணா பல்கலைக்கழகத்தின் பொறுப்பு இன்னும் அதிகம் என்று கூறினார்.
இந்தப் பல்கலைக்கழகத்தின் அனைத்து பங்குதாரர்களும் அறிவை மக்கள் நலனுக்காக பயன்படுத்த முயற்சிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
ஹேமாவதி நந்தன் பகுகுணா பல்கலைக்கழகம் இந்த ஆண்டு டிசம்பர் 1 ஆம் தேதியுடன் 50 ஆண்டுகளை நிறைவு செய்வது தமக்கு மகிழ்ச்சியளிப்பதாக குறிப்பிட்டார்.