பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானியின் இல்லத்திற்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தார்.
பாஜக மூத்த தலைவரும், முன்னாள் துணை பிரதமருமான எல்.கே.அத்வானி நேற்று தனது 96வது பிறந்த நாளை நேற்று கொண்டாடினார். இதனையொட்டி அவரது வீட்டுக்கு சென்ற பிரதமர் மோடி பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.
அதேபோல், பிரதமருடன் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் அத்வானியின் இல்லத்துக்குச் சென்று அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.
அதுதொடர்பான புகைப்படங்களையும் பிரதமர் மோடி தனது எக்ஸ் வலைதளப்பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
ஸ்ரீ எல்.கே அத்வானி ஜி அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்றும், அவர் ஒருமைப்பாடு மற்றும் அர்ப்பணிப்பின் ஒரு கலங்கரை விளக்கமாக விளங்குவதாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.
அவர் நமது தேசத்தை வலுப்படுத்தியதில் மகத்தான பங்களிப்பைச் செய்துள்ளார். அவரது தொலைநோக்கு தலைமை, தேசிய முன்னேற்றத்தையும் ஒற்றுமையையும் மேம்படுத்தியுள்ளது. அவர் நல்ல ஆரோக்கியத்துடன் நீண்ட ஆயுளுடன் வாழ வாழ்த்துகிறேன் என்று கூறியுள்ளார்.