மக்கள் விரோத அடாவடி திமுக கூட்டணியை முழுவதுமாகப் புறக்கணிப்போம்! - அண்ணாமலை
Jul 26, 2025, 01:08 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மக்கள் விரோத அடாவடி திமுக கூட்டணியை முழுவதுமாகப் புறக்கணிப்போம்! – அண்ணாமலை

Web Desk by Web Desk
Nov 9, 2023, 03:36 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அரசு அதிகாரிகளுக்கு ஆபாச அர்ச்சனை, கட்சி தொண்டர்களை அடிப்பது என்று ரொம்ப பிஸியாக இருக்கிறார் நேரு எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

தமிழக பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலையின் ”என் மண் என் மக்கள்” பாதயாத்திரை திருச்சியில் நேற்று நடைப்பெற்றது. இந்த பாதயாத்திரையில் ஆயிரக்கணக்காணோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில் பேசிய அண்ணாமலை,

திருச்சிக்கு திமுக அளித்த வாக்குறுதிகள் பற்றி விவரிக்கவும் வாய்ப்பு கிடைத்தது. தமிழின் சிறப்புக்களைக் கல்வெட்டுக்களில் பதித்து காலத்திற்கும் நிலைபெறச் செய்த நிகரில்லா மாவீரன் பெரும்பிடுகு முத்தரையர் அவர்கள் ஆண்ட மண்.

தமிழின் சிறப்புக்களைக் கல்வெட்டுக்களில் பதித்து காலத்திற்கும் நிலைபெறச் செய்த நிகரில்லா மாவீரன் பெரும்பிடுகு முத்தரையர் அவர்கள் ஆண்ட மண். வாஞ்சிநாதனுக்கு குரு, பாரதியாருக்கு நண்பர், வஉசி அவர்களின் வழக்கறிஞரான வ.வே.சு ஐயர் பிறந்த மண். அளப்பறியா தமிழ் தொண்டுக்கு சொந்தக்காரர்,… pic.twitter.com/PEHtWCGKLZ

— K.Annamalai (@annamalai_k) November 8, 2023

வாஞ்சிநாதனுக்கு குரு, பாரதியாருக்கு நண்பர், வஉசி அவர்களின் வழக்கறிஞரான வ.வே.சு ஐயர் பிறந்த மண். அளப்பறியா தமிழ் தொண்டுக்கு சொந்தக்காரர், தமிழிசை இயக்கத்தை தமிழ்நாட்டின் மூலை முடுக்கெல்லாம் பரப்பிய கி.ஆ.பெ அவர்கள் பிறந்த மண்.

தமிழகத்தின் இரு மொழி கொள்கையால் தமிழ் வளரவில்லை என்பதை அறிந்து, மும்மொழிக் கொள்கை வந்தாலும் தவறில்லை ஆனால் தமிழை கட்டாய பாடம் ஆக்கவேண்டும் என்று வலியுறுத்தியவர். கி.ஆ.பெ அவர்களின் கோரிக்கையை நமது பாரத பிரதமர் நிறைவேற்றியிருக்கிறார். 5ஆம் வகுப்பு வரை கட்டாயமாக தாய் மொழியை கற்கவேண்டும் என்று 2020ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட தேசிய கல்வி கொள்கை தெரிவிக்கிறது.

திருச்சியின் வரலாற்றை யார் எழுதினாலும் பி.ஆர்.தேவரைச் சொல்லாமல் எழுதினால் அந்த வரலாறு முழுமையடையாது. தன் குடும்பத்தின் சொத்தினைத் திருச்சி மக்களுக்கும் விடுதலைப்போருக்கும் வழங்கியவர் பி.ரத்தினவேல் தேவர் அவர்கள். திருச்சியின் தாகம் தீர்த்த தலைவர் என்று போற்றப்படுபவர். திருச்சி நகராட்சியின் வரலாற்றில் 5 முறை தலைவராக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு 13 ஆண்டுகள் 6 மாதங்கள் நகராட்சி நிர்வாகத்தை நடத்திய ஒரே தலைவர் பி.ஆர்.தேவர்தான். மாமன்னன் ராஜராஜ சோழனால் வெட்டப்பட்டது திருச்சியில் உள்ள உய்யக்கொண்டான் வாய்க்கால்.

தொடர்ந்து கழிவு நீரை அங்கே கொட்டுவது மற்றும் ஆக்கிரமிப்புகளால், தென் தமிழகத்தில் தாமிரபரணி, கொங்கு பகுதியில் நொய்யல், சென்னையில் கூவம் போல் திருச்சியின் உய்யக்கொண்டான் வாய்க்காலை சீரழித்து விட்டனர்.

திருச்சி மாவட்டத்தை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை பணிகளுக்கு நமது மத்திய அரசு 4591 கோடி ரூபாய் செலவிட்டுள்ளது. திருச்சி விமான நிலைய விரிவாக்க பணிகளுக்கு 951 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. திருச்சியில் 1548 கோடி ரூபாய் மதிப்பிலான ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

இதில் 1151 கோடி ரூபாய் மதிப்பிலான பணிகள் நிறைவுபெற்றுவிட்டன. 45,376 பேருக்கு பிரதமரின் வீடு திட்டம் மூலம் வீடு, 3,94,338 வீடுகளில் குழாயில் குடிநீர், 2,02,252 வீடுகளில் இலவச கழிப்பறைகள் , 1,35,861 பேருக்கு ரூபாய் 300 மானியத்துடன் இலவச சமையல் எரிவாயு இணைப்பு, 97,097 பேருக்கு , 5 லட்ச ரூபாய் பிரதமரின் மருத்துவ காப்பீடு, 1,47,248 விவசாயிகளுக்கு வருடம் 6000 ரூபாய், திருச்சி மாவட்டத்திற்கு முத்ரா கடன் உதவி 8,018 கோடி ரூபாய். இவை திருச்சி மாவட்டத்துக்கு மத்திய அரசு செய்துள்ள நலத் திட்டங்கள்.

கடன் தொகையினை ஈடுகட்ட, நீதிமன்றம் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவின் பெயரில், அடமான சொத்தை ஐப்தி செய்ய சென்ற துணை வட்டாட்சியர் மீது, அமைச்சர் நேருவின் வலதுகரமான பகுதிச் செயலாளர் உள்ளிட்ட நபர்கள் கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

நேரு ஒருத்தர் தான் பணக்காரராக இருக்கணும் என்று இவரது சொந்த கட்சி சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி புலம்புகிறார். அரசு அதிகாரிகளுக்கு ஆபாச அர்ச்சனை, கட்சி தொண்டர்களை அடிப்பது என்று ரொம்ப பிஸியாக இருக்கிறார் குறுநில மன்னர் நேரு.

இதற்கிடையில், துறை பணிகளை எப்படிக் கவனிப்பார்? வரும் பாராளுமன்றத் தேர்தலில், மக்கள் விரோத அடாவடி திமுக கூட்டணியை முழுவதுமாகப் புறக்கணிப்போம்.  பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கரங்களை வலுப்படுத்த, தமிழகம் முழுவதும் பாஜக கூட்டணி வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்போம் எனத் தெரிவித்தார்.

Tags: bjp k annamalaidmk fails
ShareTweetSendShare
Previous Post

அயோத்தியில் யோகி ஆதித்யநாத் தலைமையில் அமைச்சரவை கூட்டம்!

Next Post

உள்ளூர் தயாரிப்பு பொருள்களை வாங்கிய பாஜக தேசிய தலைவர்!

Related News

உலகின் நம்பகமான தலைவர்கள் – பிரதமர் மோடி முதலிடம்!

திருப்பூர் : தீர்த்த குடம் எடுத்து அம்மனுக்கு அபிஷேகம் செய்த பெண்கள்!

கம்போடியா : ராணுவ தளங்களை குறிவைத்து ட்ரோன் தாக்குதல்!

அமெரிக்கா : சூறைக்காற்றில் உருண்டோடிய கேம்பர் வாகனம்!

பிரேசில் : கார்களை ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து விபத்து!

போலந்து முதல்முறையாக ‘ஏர் பைக்கை’ உருவாக்கிய ஸ்டார்ட் அப் நிறுவனம்!

Load More

அண்மைச் செய்திகள்

கன்னியாகுமரி : கூடுதல் பேருந்துகள் இயக்க கோரி பாஜக எம்.எல்.ஏ மனு!

திமுக ஆட்சியில் காவல்துறைக்கே பாதுகாப்பு இல்லை – அண்ணாமலை

தூத்துக்குடியில் ரூ.4,500 கோடி திட்டங்களை அர்ப்பணிக்கும் பிரதமர் மோடி!

பிரான்ஸ் அதிபருக்கு அமெரிக்கா கண்டனம்!

ராமநாதபுரம் : டிராக்டர் கவிழ்ந்து விபத்து – 3 பெண்கள் பலி!

சேலம் : சாமி சிலைகளை எடுத்து சென்ற விஏஓ மீது நடவடிக்கை எடுத்திடுக – முதியவர் மாவட்ட ஆட்சியரிடம் புகார்!

சென்னை : உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மனு கொடுக்க நீண்ட நேரம் காத்திருப்பு!

ராணுவ வீரர்களின்  துணிச்சலுக்கும், அசைக்க முடியாத அர்ப்பணிப்புக்கும் வணக்கம் செலுத்துவோம் – மத்திய அமைச்சர் எல்.முருகன்

டெல்லி : யமுனை நதியில் நீர்வரத்து அதிகரிப்பு!

தாய்நாட்டின் ஒவ்வொரு அங்குலத்தையும் மீட்டெடுத்த மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்துவோம் – அண்ணாமலை

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies