சட்ட விரோத ஊடுருவல் தொடர்பாகத் தமிழகம், தெலங்கானா, கர்நாடகா, ராஜஸ்தான், ஹரியானா, மேற்குவங்கம், அசாம், திரிபுரா ஆகிய 8 மாநிலங்கள், ஜம்மு காஷ்மீர், புதுச்சேரி ஆகிய 2 யூனியன் பிரதேசங்களில் சோதனை நடத்தினர்.
சென்னை பள்ளிக்கரணை, மறைமலைநகர், படப்பை உள்ளிட்ட இடங்களில் டீ கடை குளிர்பான கடை, வடமாநில தொழிலாளர்கள் தங்கியிருந்த இடங்கள் என பல்வேறு இடங்களில் சோதனை நடத்தினர்.
இதில், படப்பையில் சகாபுதீன், மறைத்தலை நகரில் முன்னா மற்றும் அவரது கூட்டாளி கைது செய்யப்பட்டனர். இவர்கள் 3 பேரும் வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால், திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதுபோல போலியாக ஆதார அட்டை தயாரித்து, இந்தியாவுக்குள் ஊடுருவியுள்ளது தெரிய வந்தது. போலி ஆவணம் தயாரித்துக் கொடுத்ததற்காக சாஹித் உசேன் என்பவர் கைது செய்யப்பட்டார்.
இதுபோல, தமிழகத்துக்குள் ஊடுருவி உள்ள வெளிமாநிலத்தவர்கள், தீவிரவாதிகளுடன் தொடர்பில் உள்ளவர்கள் என பலரையும் குறித்து என்ஐஏ அதிகாரிகள் விசாரணையில் ஈடுபட்டனர்.
திருப்பூர், பல்லடத்தில் வங்கதேச இளைஞர்கள் போலி ஆவணங்களைப் பயன்படுத்தித் தங்கி இருப்பதாகக் கிடைத்த தகவலின் பேரில், புதுச்சேரியில் கொல்கத்தாவைச் சேர்ந்த பாபு என்பவரைக் கைது செய்தனர்.
ஜம்மு – காஷ்மீரில் ஜாபர் ஆலம் என்பவர் கைது செய்யப்பட்ட நிலையில், மற்றொருவர் தப்பிவிட்டார்.
இது தொடர்பாக டெல்லியில் பேசிய என்ஐஏ மூத்த அதிகாரி ஒருவர் நாடு முழுவதும் 50 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. சந்தேக நபர்களின் வசிப்பிடங்களில் அந்தந்த மாநில காவல்துறையினருடன் இணைந்து என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில் 44 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றார்.