சைனிக் பள்ளிகளில் 6 மற்றும் 9-ம் வகுப்பு சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வுக்கு மாணவர்கள் சேர்க்கை வரும் டிசம்பர் மாதம் 16-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இது தொடர்பாக தேசிய தேர்வு முகமை வெளியிட்ட செய்திக்குறிப்பில், நாடு முழுவதும் 33 சைனிக் பள்ளிகள் உள்ளன. இதில், 2024-25-ம் கல்வியாண்டில் 6 மற்றும் 9-ம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கான தேசிய நுழைவுத்தேர்வு, 2024-ம் ஆண்டு ஜனவரி 21-ம் தேதி நடைபெற உள்ளது.
இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு தற்போது தொடங்கப்பட்டுள்ளது. https://aissee.nta.nic.in/என்ற இணையதளம் வழியாக மாணவர்கள் வரும் டிசம்பர் 16-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
பட்டியல் இனத்தவர்கள் ரூ.500-ம், இதர பிரிவினர் ரூ.650-ம் கட்டணம் செலுத்த வேண்டும். மேலும், தகவல் அறிய விரும்புவர்கள் www.nta.ac.in என்ற வலைதளம் மூலமும், aissee@nta.ac.in என்ற மின்னஞ்சல் மூலமும் விளக்கம் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.