எனது தலைமையிலான அரசு ஏழைகளுக்காக சுமார் 4 கோடி வீடுகளை கட்டியுள்ளதாகவும், ஆனால் எனக்காக எதையும் கட்டிக்கொள்ளவில்லை என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
மத்திய பிரசேத மாநிலம் சத்னாவில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பேசினார். அப்போது, மாநிலத்தில் மீண்டும் பாஜக ஆட்சி அமைக்க வாக்களிக்குமாறுக் கேட்டுக்கொண்டார்.
அதன் மூலம் மத்திய அரசின் கரத்தை வலுப்படுத்த முடியும் என்றும், ஊழல் கறை படிந்த காங்கிரஸை தனிமைப்படுத்த முடியும் என்றும் தெரிவித்தார்.
மத்தியில் பாஜக அரசு அமைந்த பிறகு அரசாங்கத் திட்டங்களின் பலன்களைப் பெறும் காங்கிரஸால் உருவாக்கப்பட்ட 10 கோடி போலி பயனாளிகள் பதிவுகளிலிருந்து நீக்கப்பட்டதாக பிரதமர் கூறினார்.
அதனால் தான் காங்கிரஸ் தலைவர்கள் தம்மை எதிர்ப்பதாகவும், தமது அரசாங்கத்தின் நடவடிக்கை அவர்களை கடுமையாக பாதித்துள்ளதாகவும் மோடி கூறினார். இதன் மூலம் மக்களின் ரூ.2.75 லட்சம் கோடியை அரசு காப்பாற்றியுள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.
அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்படுவது அனைத்து தரப்பினரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளதாகவும் மோடி தெரிவித்தார்.
தனது உரைக்கு முன் பஜனை வாசித்த சாட்னாவைச் சேர்ந்த இசைக் குழுவைப் பாராட்டிய மோடி, “துப்பாக்கிக் குழலில் இருந்து வெளிவருவது இசையின் ட்யூன்களின் வலிமையும் சக்தியும்தான்” என்றார். உலகம் நெருக்கடிகளுக்கு மத்தியில் இருக்கும்போது, குண்டுகள் மற்றும் துப்பாக்கிகளின் சத்தம் எங்கும் கேட்கிறது, மேலும் இந்தியா போன்ற நாடுகள் இன்று உலகில் தங்கள் யோசனையின் தாக்கத்தை உருவாக்க முயற்சிக்கின்றன என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.