அனாதைகள் இல்லாத உலகம், ஒவ்வொரு குழந்தைகளுக்கும் ஒரு குடும்பம் என்ற கருத்தை மையப்பொருளாக கொண்டு தொடங்கப்பட்டது தான் உலக தத்தெடுப்பு தினம்.
மேலும் அன்பான வீடு, குடும்பத்துக்காக ஏங்கித்தவிக்கும் லட்சக் கணக்கான குழந்தைகள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இந்த தினத்தின் நோக்கம்.
குழந்தை வீட்டில் வளர்ந்தால் மகிழ்ச்சியாக இருப்பார்கள் ஆனால் தனிப்பட்ட சூழ்நிலைகள் காரணமாக பல குழந்தைகள் அனாதை இலத்திலோ, குழந்தைகள் காப்பகத்திலோ வளர்கின்றன. அவர்களுக்கு ஒரு அன்பான குடும்ப சூழலில் வளர வேண்டும் என்பதற்காக தத்தெடுப்பதற்கு சட்டபூர்வ நடைமுறைகள் உள்ளன.
குழந்தையை தத்தெடுப்பதற்கான விருப்பம் இரண்டு வகைப்படுகிறது. திருமணமான தம்பதிகள் குழந்தையை தத்தெடுப்பார்கள்.
சிலர், திருமணம் செய்துக் கொள்ளாமல் தனியாக இருப்பவர்களும் குழந்தையை தத்தெடுக்க விரும்புகின்றனர். அதற்கு சில நாடுகள் அனுமதிக்கின்றன.
திருமணம் செய்துக் கொள்லாமல் தனியாக வசிக்கும் ஆண்களும், பெண்களும் தத்தெடுக்க இந்திய சட்டங்கள் அனுமதிக்கின்றன. தத்தெடுக்கக்கூடிய குழந்தைகளுக்கு குறைந்தது ஐந்து வயது இருக்க வேண்டும்.
மேலும், திருமணமாகாத ஆண்களால், ஆண் குழந்தைகளை மட்டுமே தத்தெடுக்க முடியும். திருமணமாகாத பெண்களுக்கு இந்த கட்டுப்பாடு இல்லை.
ஆராரோ பாட இங்கு தாயுமில்லாமல் , குழந்தையை அள்ளி செல்லம் கொஞ்ச யாருமில்லாமல் தவிக்கும் மழலைகளுக்கு ஆதரவு கொடுப்போம்.