நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகள் இந்த உலகக்கோப்பையின் தங்களுடைய கடைசி லீக் போட்டியில் இன்று விளையாடவுள்ளது.
ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்றையப் போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெறயுள்ளது.
இதில் நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகள் இந்த உலகக்கோப்பையின் தங்களுடைய கடைசி லீக் போட்டியில் விளையாடவுள்ளது.
நியூசிலாந்து அணி தொடர்ச்சியாக 4 போட்டிகளில் வெற்றி பெற்று, பின்பு தொடர்ச்சியாக 4 போட்டிகளில் தோல்வியடைந்து 8 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் 4 வது இடத்தில் உள்ளது.
அதேபோல் இலங்கை அணி விளையாடிய 8 போட்டிகளில் 2 போட்டிகளில் வெற்றி பெற்று 6 போட்டிகளில் தோல்வியடைந்து 4 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் 9 வது இடத்தில் உள்ளது.
சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இரு அணிகளும் இதுவரை 101 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் நியூசிலாந்து அணி 51 முறையும், இலங்கை அணி 41 முறையும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு போட்டி சமனில் முடிய, 8 போட்டிகளில் முடிவு எட்டப்படவில்லை.
இந்தியாவில் உள்ள பேட்ஸ்மேன்களுக்கு மிகவும் சாதகமான மைதானங்களில் பெங்களூரு சின்னசாமி மைதானமும் ஒன்று.
சிறிய பவுண்டரிகள் மற்றும் அதிவேகமான அவுட்-பீல்ட் காரணமாக இங்கு பேட்டிங் செய்ய வீரர்கள் அதிகம் எதிர்பார்க்கின்றனர். அதேநேரம், போட்டி செல்லச் செல்ல சுழற்பந்து வீச்சாளர்களுக்கும் களத்தில் சிறிது ஆதரவு கிடைக்கும்.
மேலும் இந்தப் போட்டியில் வெற்றி வாய்ப்புக் கணக்கெடுப்பில் நியூசிலாந்து அணி 74% வெற்றி பெரும் என்றும் இலங்கை அணி 26% வெற்றி பெரும் என்றும் இணையத்தில் பதிவிடப்பட்டுள்ளது.