இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேக பந்துவீச்சாளர் முகமது ஷமியை திருமணம் செய்து கொள்ள தயாராக இருப்பதாக பிரபல பாலிவுட் நடிகை பாயல் கோஷ் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணியின் வேக பந்துவீச்சாளர் தான் விளையாடிய 3 போட்டிகளில் மட்டுமே 14 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். தற்போது நான்கு போட்டிகளில் 16 விக்கெட்கள் வீழ்த்தி இருக்கிறார்.
மேலும், இந்திய அணியில் தவிர்க்க முடியாத வீரராக பல ஆண்டுகளாக இருக்கிறார் முகமது ஷமி. கிரிக்கெட்டில் அவர் பல வெற்றிகளை குவித்தாலும், அவரது தனிப்பட்ட வாழ்க்கை கசப்பாகவே உள்ளது.
முகமது ஷமி, ஹாசின் ஜஹான் என்பவரை 2014 இல் திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு 2015இல் மகள் பிறந்தார். ஆனால், அடுத்த சில ஆண்டுகளில் அவர்கள் திருமண வாழ்வில் பல்வேறு சிக்கல்கள் எழுந்தன.
ஹாசின் ஜஹான், ஷமி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது பல்வேறு புகார்களை கூறினார். ஷமி மேட்ச் பிக்ஸிங் செய்ததாக கூட அவர் புகார் அளித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், ஷமியை இரண்டாவது திருமணம் செய்து கொள்ள தயாராக இருப்பதாக பாலிவுட் நடிகை பாயல் கோஷ் தெரிவித்துள்ளார்.
அவர் ட்விட்டரில், “முகமது ஷமி நீங்கள் நன்றாக ஆங்கிலத்தில் பேசினால், உங்களை திருமணம் செய்து கொள்ள நான் தயாராக இருக்கிறேன்” என கூறி இருக்கிறார். இதை அவர் வேடிக்கையாக கூறினாரா? அல்லது வெளிப்படையாகவே இதை அறிவித்துள்ளாரா? என்பது தெரியவில்லை.
முகமது ஷமியின் முதல் மனைவி ஹாசின் ஜஹான் சமீபத்தில் அவரது சிறப்பான ஆட்டத்துக்கு வாழ்த்து கூற முடியாது. இந்திய அணி வெற்றி பெற மட்டும் வாழ்த்து கூறுகிறேன் என கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த சூழ்நிலையில் தான் பாயல் கோஷ் திருமணம் செய்ய தயார் என அறிவித்து இருக்கும் தகவலும் பரவி வருகிறது. இருப்பினும் முதல் மனைவி இருக்கையில் இப்படி ஒரு கேட்பது சரியா என்ற விவாதமும் இணையத்தில் பரவிவருகிறது.