உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 2 அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை இன்று இரவு தொடங்கவுள்ளது.
ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. உலகக்கோப்பைத் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது.
இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய 3 அணிகள் அரையிறுதிக்குத் தகுதிப் பெற்றுள்ளது. மேலும் அரையிறுதிக்குள் நுழையப்போகும் 4 வது அணி யார் என்பது பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.
இந்நிலையில் மும்பையில் வரும் 15 ஆம் தேதி முதல் அரையிறுதி போட்டியும், கொல்கத்தாவில் 16 ஆம் தேதி இரண்டாவது அரையிறுதி போட்டியும் அகமதாபாத்தில் 19 ஆம் தேதி இறுதிப் போட்டியும் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் இந்தப் போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை இன்று இரவு 8 மணிக்கு https://tickets.cricketworldcup.com என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தொடங்கும் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது.
முதல் அரையிறுதியில் இந்தியாவுடன் நான்காவது இடம் பிடிக்கும் அணியும், இரண்டாவது அரையிறுதியில் தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகளும் விளையாடவுள்ளன.