அரசு முறை பயணமாக டெல்லி வந்த அமெரிக்க பாதுகாப்பு துறை செயலாளரை பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் வரவேற்றார்.
அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லாயிட் ஆஸ்டின் அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ளார். டெல்லி விமான நிலையத்தில் அவரை பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் வரவேற்றார்.
இதனைத்தொடர்ந்து இந்தியா அமெரிக்கா இடையே நாளை இருதரப்பு பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.
இதில் இந்தியா சார்பில் அமைச்சர்கள் ராஜ்நாத்சிங், எஸ்.ஜெய்சங்கர் ஆகியோரும், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் மற்றும் பாதுகாப்பு செயலாளர் லாயிட் ஆஸ்டின் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
2018 ஆம் ஆண்டில், இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான முதல் 2+2 உரையாடல் வெள்ளை மாளிகையில் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் காலத்தில் நிகழ்ந்தது.
அப்போதைய அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக்கேல் பாம்பியோ மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஜேம்ஸ் மேட்டிஸ் ஆகியோர் மறைந்த இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மற்றும் அப்போதைய பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரை சந்தித்து ஆலோசனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.