தீபாவளி பண்டிகையையொட்டி மக்கள் பேருந்துக்காக கடன் வாங்கிக் கொண்டு செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என பாஜக மகளிர் அணியின் தேசியத் தலைவரும் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதிசீனிவாசன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் பதிவில்,
தமிழகத்தில் தீபாவளி பண்டிகையையொட்டி ஆம்னி பேருந்து கட்டணம் 30% வரை குறைக்கப்படும் என அமைச்சர் சிவசங்கர் சில தினங்களுக்கு முன் அறிவித்ததை நான் செய்தித்தாள் மூலம் அறிந்தேன்.
தமிழகத்தில் தீபாவளி பண்டிகையையொட்டி ஆம்னி பேருந்து கட்டணம் 30% வரை குறைக்கப்படும் என அமைச்சர் சிவசங்கர் சில தினங்களுக்கு முன் அறிவித்ததை நான் செய்தித்தாள் மூலம் அறிந்தேன்..
ஆனால் நடப்பதோ வேறு… சென்னையிலிருந்து மதுரை செல்ல கட்டணம் ரூ.3000 – 3400, நெல்லைக்கான கட்டணம் ரூ.3200 -… pic.twitter.com/j3X7jEGrey
— Vanathi Srinivasan (@VanathiBJP) November 9, 2023
ஆனால் நடப்பதோ வேறு. சென்னையிலிருந்து மதுரை செல்ல கட்டணம் ரூ.3000 – 3400, நெல்லைக்கான கட்டணம் ரூ.3200 – 3500, கோவைக்கான கட்டணம் ரூ.3500 – 4000 என்ற அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகையை கொண்டாட சொந்த ஊருக்கு செல்லும் மக்கள் பேருந்துக்காக கடன் வாங்கிக் கொண்டு செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். சொல்வது ஒன்று… செய்வது ஒன்று என மீண்டும் நிரூபித்துள்ளது திமுக அரசு எனத் தெரிவித்துள்ளார்.