ராணிப்பேட்டையில் மது ஒழிப்பு பேரணி நடத்த அனுமதி மறுத்த காவல்துறைக்குச் சென்னை உயர்நீதிமன்றம் சரமாரிக் கேள்விக் கணையைத் தொடுத்துள்ளது.
ராணிப்பேட்டையில் மது ஒழிப்பு பேரணி நடத்ததுவதற்குத் தமிழகத்தைச் சேர்ந்த ஒரு அரசியல் கட்சி சார்பில் காவல்துறையிடம் அனுமதி கேட்கப்பட்டது. ஆனால், காவல்துறை அனுமதி வழங்கவில்லை.
இதனை எதிர்த்து அக்கட்சி சார்பில் காவல்துறைக்கு எதிராகச் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மாரத்தான் ஓடுவதற்கும், நடப்பதற்கும் அனுமதி வழங்கப்படும் போது, மதுவுக்கு எதிராகப் பிரச்சாரம் செய்ய அனுமதி மறுப்பது ஏன்? என்றும்,
ஆளும் கட்சியினருக்கு மட்டும்தான் காவல்துறை அனுமதி வழங்குமா? காவல்துறை என்பது யாருக்காக உள்ளது? பொது மக்களுக்கா ? அல்லது ஆளும் கட்சிக்கு ஆதரவாக உள்ளதா?
வருமானவரித்துறை அமலாக்கத்துறை சோதனை நடத்தினால் அதனை மத்திய அரசு இன்று குற்றம் சாட்டுகின்றனர். ஆனால் தமிழகக் காவல்துறை யாருடைய ஏஜென்சியாக செயல்படுகிறது? என சரமாரியாக கேள்வி எழுப்பினார்.
நீதிபதியின் இந்த அதிரடியை எதிர்பார்க்காத ஸ்டாலின் காவல்துறை மிகவும் அதிர்ச்சியில் உறைந்து போனது.