மதுரையிலிருந்து 15 மைல் தொலைவில் அமைந்துள்ளது, முருகனின் ஆறுபடை வீடுகளில், ஆறாவது படை வீடாகப் போற்றப்படுவது பழமுதிர்சோலை முருகன் கோவில். இந்த மலைக்குச் சோலைமலை என்ற சிறப்பு பெயரும் உண்டு.
சிறுவன் வேடத்தில் வந்த முருகப்பெருமான் அவ்வையாரிடம், சுட்டப் பழம் வேண்டுமா அல்லது சுடாத பழம் வேண்டுமோ எனத் திருவிளையாடல் நடத்திய நாவல் மரம் இன்றும் இங்குக் காணப்படுகிறது. இந்த நாவல் மரத்தின் பழங்கள் சஷ்டி மாதமாகிய ஐப்பசியில் பழுக்கிறது. முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் மூலஸ்தானத்தில் தம்பதியருடன் காட்சி தரும் கோவில் பழமுதிர்சோலை மட்டுமே.
பழமுதிர்சோலைக்குச் சற்று உயரத்தில் நூபுர கங்கை என்ற புனித
தீர்த்த தண்ணீரில்தான் அழகர் கோவில் பிரசாதமான சம்பா தோசை தயார் செய்யப்படுகிறது.
இந்தக் கோவிலில், முருகனுக்குரிய வைகாசி விசாகம், ஆடி கார்த்திகை, ஆவணி பூரம், திருக்கார்த்திகை, பங்குனி உத்திரம் கொண்டாடப்பட்டாலும், கந்த சஷ்டி விழா முக்கிய விழாவாகக் கொண்டாடப்படுகிறது.
இப்படி புகழ் பெற்ற இந்த திருக்கோவிலில், இந்த ஆண்டுக்கான கந்த சஷ்டி விழா வரும் 13-ம் தேதி தொடங்குகிறது. 18-ம் தேதி சூரசம்ஹாரம் நடைபெறுகிறது.