கும்பகோணம் அருகில் உள்ள பெருமாள் திருக்கோவில் ஓவியத்தில் கிறிஸ்துவ தேவதை படம் வரையப்பட்டுள்ளதாக இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் குற்றம் சாட்டியுள்ளார்.
கும்பகோணத்தில், இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், திமுக ஆட்சிக்கு வந்த பிறகு இந்து சமய அறநிலையத்துறை கெட்டுப்போய்விட்டது. அதற்கு பல உதாரணங்கள் உண்டு.
தற்போது, 108 திவ்விய தேசங்களில் ஒன்று கும்பகோணம் அடுத்துள்ள திருக்கண்ணபுரம் பெருமாள் கோவில். இந்த திருக்கோவிலின் உள்ளே ஓவியங்கள் வரையப்பட்டுள்ளது.
இதில், திருக்கோவில் மேற்கூரையில் கிறிஸ்துவ தேவதையின் படங்கள் வரையப்பட்டுள்ளது. இது மிகவும் கண்டனத்திற்கு உரியது.
கிறிஸ்துவ தேவதை ஓவியத்தை திருக்கோவிலில் இருந்து உடனே நீக்காவிட்டால், தமிழகம் தழுவிய போராட்டம் நடைபெறும் என எச்சரிக்கை விடுத்தார்.