நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட நேபாளத்திற்கு 3ஆவது கட்டமாக 12 டன் நிவாரணப் பொருட்களை இந்தியா அனுப்பியுள்ளது.
நவம்பர் 3ஆம் தேதி மேற்கு நேபாளத்தின் ஜஜர்கோட் மற்றும் ருகும் மாவட்டங்களில் 6.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது, இதில் 153 பேர் உயிரிழந்தனர். 260 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். நிலநடுக்கம் காரணமாக சுமார் 8000 கட்டிடங்கள் சேதம் அடைந்தன.
இதனைத்தொடர்ந்து அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட நேபாள நாட்டிற்கு இந்தியா நிவாரணப்பொருள்களை அனுப்பி வருகிறது. ஏற்கனவே இருமுறை நிவாரண பொருள்கள் அனுப்பப்பட்ட நிலையில், தற்போது 3-வது கட்டமாக 12 டன் நிவாரணப்பொருகள் அனுப்பப்பட்டுள்ளது.
அதில் அத்தியாவசிய பொருள்கள், மருந்துகள், மருத்துவ உபகரணங்கள், தார்பாய் விரிப்புகள், போர்வைகள் உள்ளிட்டவை அடங்கும். இதுதொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் .ஜெய்சங்கர் விடுத்துள்ள பதிவில், இந்தியா எப்போதும் நம்பகமான கூட்டாளியாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.
கடந்த 2015 ஆம் ஆண்டில், 7.8 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சுமார் 9 ஆயிரம் பேர் உயிரிழந்தனர். 800,000 வீடுகளை சேதமானது குறிப்பிடத்தக்கது.