பாகிஸ்தானில் பாஸ்போர்ட் அச்சிடுவதற்கு பயன்படுத்தப்படும் லேமினேஷன் பேப்பர் தட்டுப்பாடு காரணமாக, புதிய பாஸ்போர்ட் பெற காலதாமதம் ஆவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அதிகரித்து வரும் பணவீக்கம், அபரிமிதமான மின் கட்டணங்கள் மற்றும் பணமதிப்பு சரிவு உள்ளிட்ட காரணங்களால் பாகிஸ்தான் மக்கள் பல்வேறு இன்னல்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
பாஸ்போர்ட்டில் பயன்படுத்தப்படும் லேமினேஷன் பேப்பர் பிரான்சில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது.இந்நந இல்லாததால் நாடு முழுவதும் பயண ஆவணங்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
எனவே, வேலைக்காகவோ, பள்ளிக்காகவோ அல்லது ஓய்வுக்காகவோ வெளிநாடுகளுக்குச் செல்ல முடியாமல் பயணிகள் தவிக்கின்றனர்.
“நான் விரைவில் வேலைக்காக துபாய்க்கு செல்ல தயாராகிவிட்டேன். எங்கள் அதிர்ஷ்டம் இறுதியாக மாறும் என்பதில் நானும் எனது குடும்பத்தினரும் பரவசமடைந்தோம், ஆனால் பாஸ்போட் விவகாரம் காரணமாக எனது எண்ணம் நிறைவேறாது போல் தெரிகிறது என இளைஞர் ஒருவர் தெரிவித்துள்ளார்.