தமிழகத்தின் காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகள் பெரிதும் நம்பியுள்ள, 120 அடி உயரம் கொண்ட மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு, 8 ஆயிரத்து 424 கன அடியாக உள்ளது.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து, நேற்று காலை 57.18 அடியாக இருந்த நிலையில், இன்று காலை 58.15 அடியாக அணையின் நீர்மட்டம் அதிகரித்துள்ளது.
நேற்று காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக, அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது. நேற்று வினாடிக்கு 11 ஆயிரத்து 445 கன அடியாக வந்து கொண்டு இருந்த நிலையில், இன்று காலை நிலவரப்படி 8 ஆயிரத்து 424 கன அடியாக நீர்வரத்து அதிகரித்து உள்ளது. அணையின் நீர் இருப்பு 23.32 டிஎம்சியாக உள்ளது. குடிநீர் தேவைக்காக அணையிலிருந்து 250 கன அடியாக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
அணைக்கு வரும் நீரின் அளவைவிட, அணையிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு குறைவாக உள்ளதால், அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.