ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் ஆஸ்திரேலிரேலியா, பங்களாதேஷ் அணிகள் விளையாடி வருகின்றன.
ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதுவரை நடந்து முடிந்துள்ள போட்டிகளின் முடிவில் இந்தியா, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன.
உலகக்கோப்பை தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இன்றைய போட்டி புனேயில் ஆஸ்திரேலியா மற்றும் பங்களாதேஷ் இடையே நடைபெறுகிறது.
இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அதன்படி பங்களாதேஷ் அணி பேட்டிங் செய்கிறது. பங்களாதேஷ் அணியின் தொடக்க வீரர்களாக தஞ்சீத் ஹசன், லிட்டன் தாஸ் ஆகியோர் களமிறங்கினர். இந்த ஜோடி நிதானமாக விளையாடி ரன்களைக் குவித்தனர்.
தஞ்சீத் ஹசன் 34 பந்துகளில் 36 ரன்களுக்கும், லிட்டன் தாஸ் 45 பந்துகளில் 36 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். பங்களாதேஷ் அணி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 114 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.
பாட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியில் டேவிட் வார்னர், டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ், ஸ்டீவ் ஸ்மித், மார்னஸ் லாபுஷாக்னே, ஜோஷ் இங்கிலிஸ், மார்கஸ் ஸ்டோனிஸ், சீன் அபோட், ஆடம் ஜம்பா, ஜோஷ் ஹேசில்வுட் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
நஸ்முல் ஹொசைன் சாண்டோ தலைமையிலான வங்கதேச அணியில் தஞ்சீத் ஹசன், லிட்டன் தாஸ், மஹ்முதுல்லா, முஷ்பிகுர் ரஹீம், தௌஹீத் ஹிரிடோய், மெஹ்தி ஹசன் மிராஜ், மஹேதி ஹசன், தஸ்கின் அகமது, நசும் அகமது, முஸ்தாபிசுர் ரஹ்மான் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.