ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் போட்டிகள் முடிவடைந்த நிலையில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.
ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் சர்வேதேச நாடுகளிலிருந்து 10 நாடுகள் பங்குபெற்றது.
இதில் புள்ளி பட்டியலில் முதல் நான்கு இடத்தை பெற்ற அணிகள் தான் அரையிறுதிக்கு தகுதிபெறும் அணிகள் அந்த வகையில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய 4 அணிகள் அரையிறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.
புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் இந்தியா உள்ளது. இந்தியா அணி இதுவரை விளையாடிய 9 போட்டிகளில் 9 போட்டிகளிலும் வெற்றி பெற்று யாராலும் அசைக்கமுடியாத அணியாக திகழ்கிறது. இந்திய அணியை பொறுத்தவரையில் பேட்ஸ்மேன் மற்றும் பந்துவீச்சாளர்கள் என அனைவரும் தங்களின் பங்கை சிறப்பாக காட்டி வருகின்றனர்.
புள்ளி பட்டியலில் இரண்டாம் இடத்தில் தி ஆப்பிரிக்கா அணி உள்ளது. தென் ஆப்பிரிக்கா அணி விளையாடிய 9 போட்டிகளில் 7 போட்டிகளில் வென்று பெற்று 2 போட்டிகளில் தோல்வியடைந்து உள்ளது. தென் ஆப்பிரிக்கா அணி பேட்டிங்கில் மிகவும் சிறப்பாக அசத்தி வருகிறது.
புள்ளி பட்டியலில் மூன்றாம் இடத்தில் ஆஸ்திரேலியா அணி உள்ளது. ஆஸ்திரேலியா அணி இந்த தொடரின் ஆரம்பத்தில் மிகவும் மோசமாக விளையாடி விளையாடி தொடர்ந்து 2 போட்டிகளை ஆட்டமிழந்து வந்தது. ஆனால் அடுத்து வந்த 7 போட்டிகளிலும் அபாரமாக விளையாடி வெற்றியை பதிவு செய்தது.
புள்ளி பட்டியலில் நான்காம் இடத்தில் நியூசிலாந்து அணி உள்ளது. நியூசிலாந்து விளையாடிய முதல் நான்கு போட்டிகளில் வெற்றி பெற்று வந்த நிலையில் அடித்து விளையாடிய 4 போட்டிகளில் தொடர் தோல்வியை சந்தித்துள்ளது ஆனால் கடைசி போட்டியில் சிறப்பாக அரையிறுதி வாய்ப்பை தக்கவைத்து.
இந்நிலையில் நாளை முதல் அரையிறுதிப் போட்டி இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையே நடைபெறவுள்ளது. நாளை மறுநாள் இரண்டாம் அரையிறுதிப் போட்டி தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே நடைபெறவுள்ளது. இந்த இரண்டு போட்டிகளும் வெற்றி பெரும் அணி இறுதிப் போட்டியில் மோதும்.