வழிபாட்டு தலங்கள் மீதான தாக்குதலை கனடா தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்தியா வலியுறுத்தியுள்ளது.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் கவுன்சில் கூட்டம் ஜெனீவாவில் நடைபெற்றது. இதில் இந்தியா, வங்காளதேசம், இலங்கை உள்ளிட்ட ஐ.நா. உறுப்பு நாடுகள் கலந்து கொண்டு பல்வேறு பரிந்துரைகளை வழங்கின.
இதில் இந்திய தூதர் முகமது ஹுசைன் பங்கேற்று பேசினார்.
அப்போது, மனித கடத்தலை எதிர்த்துப் போராடுவதற்காக கனடாவின் தேசிய அறிக்கையை சமர்ப்பித்ததற்காக அந்நாட்டு பிரதிநிதிகளை இந்தியா வரவேற்கிறது மற்றும் நன்றி தெரிவிக்கிறது என்று குறிப்பிட்டார்.
வன்முறையைத் தூண்டுவதற்கும், தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் குழுக்களின் செயல்பாடுகளை அனுமதிக்காததற்கும் கருத்துச் சுதந்திரத்தைத் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்க உள்நாட்டு கட்டமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
சிறுபான்மையினர் மற்றும் வழிபாட்டுத்தலங்கள் மீதான தாக்குதல்களை தடுக்கவும், வெறுப்பு பேச்சுகள் மற்றும் குற்றங்களை கட்டுப்படுத்தும் வகையில் கனடா அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.