வாக்காளர் பட்டியலில் 18 வயது நிரம்பியவர்கள் பெயர் சேர்த்தல், விடுபட்டவர்கள் பெயர் சேர்த்தல், பெயரில் திருத்தம் செய்தல், நீக்கம் செய்தல் உள்ளிட்ட சிறப்பு முகாம் குறித்த தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி 2024-ம் ஆண்டு ஜனவரி முதல் தேதி அன்று 18 வயது நிரம்பிய அனைவரும் வாக்காளராக தங்களது பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்கலாம். இதற்கான முகாம் கடந்த அக்டோபர் 27 -ம் தேதி துவங்கப்பட்டது. இந்த முகாம் டிசம்பர் 9 -ம் தேதி வரை நடைபெறுகிறது.
அதன் ஒரு பகுதியாக வாக்காளர்கள் தங்கள் பெயரைச் சேர்க்கவும், வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்யவும் வசதியாக நவம்பர் 4, 5, மற்றும் 18, 19 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டன. இதில், நவம்பர் 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் முகாம் நிறைவு பெற்றன.
இந்த நிலையில், 18 மற்றும் 19 ம் தேதிக்குப் பதிலாக, வரும் 25 சனிக்கிழமை மற்றும் 26 -ம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஆகிய தேதிகளாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
இந்த வாய்ப்பை அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தமிழக தலைமை தேர்தல் ஆணையர் சத்தியபிரதா சாஹூ கேட்டுக் கொண்டுள்ளார்.