மாணவர்கள் தங்களிடம் புதைந்திருக்கும் படைப்பாற்றலை வெளிக் கொண்டு வரும் வகையில், நடிகர் சார்லி சாப்ளின் இயக்கி நடித்துள்ள தி கிட் என என்ற மெளன திரைப்படம் அரசு பள்ளிகளில் திரைப்பட உள்ளது.
2023-2024 ஆம் கல்வியாண்டில், அனைத்து அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 9 வகுப்பு வரை பயின்று வரும் மாணவர்களுக்காக ஒவ்வொரு மாதத்தின் 2-வது வாரத்தில் சிறார் திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன.
மாணவர்கள் தாங்கள் வாழ்வில் சூழலைப் புரிந்து கொள்ளவும், பல்வேறு கலாச்சாரங்களின் தனித்தன்மையை உணர்ந்து கொள்ளவும், தன்னம்பிக்கை பெருகவும், நட்பு பாராட்டுதல், குழுவாக இணைந்து செயல்படுதல், பாலின சமத்துவம் உணர்தல், தங்களிடம் புதைந்திருக்கும் படைப்பாற்றலை வெளிக் கொண்டு வருதல் ஆகியவை இதன் முக்கிய நோக்கமாகும்.
தற்போது, நவம்பர் மாதம் தி கிட் என என்ற மெளன திரைப்படம் திரைப்பட உள்ளது. இது சுமார் 68 நிமிடங்கள் ஓடக்கூடியது. நடிகர் சார்லி சாப்ளின், படத்தை இயக்கியுள்ளதோடு முக்கிய கதாப்பாத்திரத்திலும் நடித்துள்ளார். மேலும், கதை எழுதி, இசையமைத்து அவரே படத்தொகுப்பும் செய்துள்ளார்.
இந்த படம் சார்லி சாப்ளினின் படைப்புகளில் மிகச் சிறந்த படைப்பாகும். இது அவரது சுயசரிதை ஆகும். அவரது குழந்தைப்பருவ அனுபவத்தை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. இது ஒரு அமெரிக்க மெளன நகைச்சுவை நாடகத் திரைப்படமாகும்.