ஆறுபடை வீடுகளில் முதற்படை வீடான திருப்பரங்குன்றத்தில் கந்த சஷ்டி விழா மிக உற்சாகமாக நடைபெற்றது.
இந்த ஆண்டு கந்த சஷ்டி திருவிழா 13-ம் தேதி தொடங்கி, 19- ம் தேதி வரை 7 நாட்கள் நடைபெறுகிறது.
திருவிழாவின் முதல் நாளில் உற்சவர் சன்னதியில் தெய்வானையுடன் எழுந்தருளிய சுப்பிரமணிய சுவாமிக்கும் , தெய்வானை மற்றும் வள்ளி சமேத சண்முகப் பெருமானுக்கும் காப்புக்கட்டுதலுடன், அரோகரா முழகத்துடன் இன்று துவங்கியது.
இதனையடுத்து, விரதம் அனுசரிக்கும் பக்தர்களுக்கு காப்பு கட்டப்பட்டது. விரதம் இருக்கும் பக்தர்கள் 6 நாட்கள் காலையிலும், மாலையிலும் இருவேளை சரவண பொய்கையில் நீராடி கிரிவலம் வந்து சுவாமி தரிசனம் செய்வது வழக்கம்.
விழாவையொட்டி, தினமும் காலை, மாலை சண்முகார்ச்சனை மற்றும் தெய்வானையுடன் முருகப்பெருமான் புறப்பட்டு நடைபெறுகிறது.
விழாவின் சிகர நிகழ்வாக 17 – ம் தேதி வேல் வாங்குதல் நிகழ்ச்சியும், 18 -ம் தேதி மாலை 6 மணி முதல் 6.30 மணிக்குள் சொக்கநாதர் திருக்கோவில் முன்பு சூரசம்காரமும் நடைபெறுகிறது.