அமெரிக்கர்களுக்கு பதிலாக புலம்பெயர்ந்தவர்களை பணியில் அமர்த்திய குற்றச்சாட்டில் ஆப்பிள் நிறுவனத்திற்கு ரூ.200 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கக் குடிமக்கள் மற்றும் கிரீன் கார்டு வைத்திருப்பவர்களைக் காட்டிலும் குறிப்பிட்ட பணிகளுக்காக புலம்பெயர்ந்த தொழிலாளர்களை பணிக்கு அமர்த்திய விவகாரத்தில் ஆப்பிள் நிறுவனம் அமெரிக்க சட்டத்தை மீறியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
அமெரிக்க குடிமக்கள், H-1B மற்றும் L-1 போன்ற அமெரிக்க வேலை விசாக்கள் வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே பணியில் முன்னுரிமை கொடுக்க வேண்டும் என விதி. ஆனால் இதனை ஆப்பிள் நிறுவனம் புலம்பெயர்ந்தவர்களை பணிக்கு அமர்த்தியாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதனையடுத்து அமெரிக்க நீதித் துறையுடனான ஒரு ஒப்பந்தத்தில் $25 மில்லியன் செலுத்த ஆப்பிள் நிறுவனம் ஒப்புக்கொண்டது.
குடியுரிமை அடிப்படையிலான பாகுபாடு தொடர்பான வழக்குகளில் நீதித் துறையின் இது மிகப்பெரிய தீர்வு என கூறப்படுகிறது. விதிமுறைகளின்படி ஆப்பிள் $6.75 மில்லியன் சிவில் அபராதம் செலுத்த வேண்டும் மற்றும் குறிப்பிடப்படாத எண்ணிக்கையிலான பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு $18.25 மில்லியன் ஒதுக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.