செப்டம்பர் மாதம் வரை அரசியல் கட்சிகள் பெற்றுள்ள தேர்தல் பத்திர விவரங்களை சீலிடப்பட்ட கவரில் சமர்ப்பிக்குமாறு தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது. நாளைக்குள் விவரங்களை அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.
அனைத்து அரசியல் கட்சிகளும் 30 செப்டம்பர் 2023 வரை பெற்ற தேர்தல் பத்திரங்களின் விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் சீல் வைக்கப்பட்ட கவரில் அளிக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலைத் தொடர்ந்து உத்தரவிடப்பட்டுள்ளது.
அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவருக்கும் தேர்தல் ஆணையம் எழுதிய கடிதத்தில், தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை பெற்ற அனைத்து கட்சிகளும் நன்கொடையின் விவரங்களை, ஒவ்வொரு பத்திரத்திற்கும் நன்கொடையாளர்களின் விவரங்கள் மற்றும் தொகையை வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது. அத்துடன் ஒவ்வொரு பத்திரத்தின் மீதும் பெறப்பட்ட கடன் விவரங்களை சமர்பிக்கவேண்டும் என தெரிவித்துள்ளது.