75 ஆண்டுக்கால வரலாற்றில் முதன்முறையாகக் காஷ்மீரில் உள்ள சாரதா தேவி கோவிலில் தீபாவளி வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.
இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான தீபாவளி நாடு முழுவதும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.
அந்த வகையில், காஷ்மீரின் குப்புவாரா மாவட்டத்தில் உள்ள சாரதா தேவி கோவிலில் தீபாவளி பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. இது வரை வரலாற்றில் இல்லாத அளவிற்குக் காஷ்மீர் மக்கள் தீபாவளி பண்டிகையைக் கொண்டாடினர். காஷ்மீரில் உள்ள அனைத்து இந்து கோவில்களும் மின் அலங்காரம் செய்யப்பட்டு ஜொலித்தன.
எல்லைக் கோட்டுப் பகுதியில் அமைந்துள்ள சாரதா தேவி கோவில் சமீபத்தில்தான் பல கோடி செலவில் புதுப்பிக்கப்பட்டது. இக்கோவிலில் சுதந்திரம் அடைந்த 75 ஆண்டுக் கால வரலாற்றில் தற்போது தான் தீபாவளிக்குச் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. கோவிலில் தீபாராதனைக் காண்பித்த பிறகு, கோவிலுக்கு வெளியே திரண்டிருந்த பொதுமக்கள் பட்டாசு வெடித்துக் கொண்டாடினர்.
இதுவரை எந்த ஆண்டும் இல்லாத அளவிற்குப் பட்டாசுகளின் ஒளி விண்ணைப் பளபளக்கச் செய்தது. மக்கள் விளக்குகளை ஏற்றி இனிப்புகளை வழங்கி உற்சாகமாகத் தீபாவளி பண்டிகையைக் கொண்டாடினர்.