நாட்டில் உள்ள எட்டுக் கோடி விவசாயிகள் பயன்பெறும் வகையில், விவசாயிகள் நிதியுதவி திட்டத்தின் கீழ் 15-வது தவணை தொகையான ரூ.18,000 கோடியை பாரதப் பிரதமர் நரேந்திர மோடி இன்று விடுவித்தார்.
நாட்டில் உள்ள உள்ள சிறு, குறு விவசாயிகளுக்கு உதவும் வகையில் பிரதமர் மோடியின் விவசாயிகள் நிதி உதவித் திட்டமான, பி.எம் கிசான் சம்மான் நிதி திட்டம் கடந்த 2019 -ம் ஆண்டு தொடங்கப்பட்டது. விவசாயிகள் நிதியுதவி திட்டத்தை பாரத பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
இந்த திட்டத்தின்படி, பிரதமரின் விவசாயிகள் நிதியுதவி திட்டத்தில் ஆண்டுக்கு 3 தவணைகளில் தலா ரூ.2,000 வீதம் மொத்தம் ரூ.6,000 விவசாயிகளின் வங்கி கணக்குகளில் நேரடியாக செலுத்தப்படுகிறது. இதனால், விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த திட்டத்தில் இதுவரை 14 தவணைகள் மூலம் விவசாயிகளுக்கு ரூ.2.59 லட்சம் கோடி நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.
விவசாயிகளின் பொருளாதாரத்தை மேம்படுத்தவும், கடனைக் குறைக்கவும் மற்றும் விவசாய முதலீடுகளை ஊக்குவிக்கும் வகையில் இந்த திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால், இந்த திட்டத்தை உலக நாடுகள் பாராட்டி வருகிறது.
14-வது தவணையான ரூ.17,000 கோடியை கடந்த ஜூலை மாதத்தில் மத்திய அரசு விடுவித்தது. அந்த வகையில், 8.5 கோடி விவசாயிகள் நேரடியாக பயன் பெற்றனர்.
இந்த நிலையில், விவசாயிகள் நிதியுதவி திட்டத்தின் கீழ் 15-வது தவணை தொகையான ரூ.18,000 கோடியை பிரதமர் நரேந்திர மோடி இன்று விடுவித்தார். இதன் மூலம் 8 கோடி விவசாயிகள் நேரடியாக பயன் பெற்றனர்.