இனிவரும் ஆட்சி பாஜக ஆட்சி!
Aug 31, 2025, 07:20 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இனிவரும் ஆட்சி பாஜக ஆட்சி!

- பாஜக பிரச்சார பிரிவு குமரிகிருஷ்ணன்.

Web Desk by Web Desk
Nov 15, 2023, 02:14 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தேசிய நெடுஞ்சாலையில் நடந்து போனவர்கள் உண்டு, இப்படி மக்களை சந்தித்தவர்கள் இல்லை! என பாஜக பிரச்சார பிரிவு மாநிலத் தலைவர் குமரிகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில்,

தமிழகம் முழுமையும் நடந்து சாதனை நிகழ்த்துகிறார் ஒரு தலைவர்!
ஒரு ஏழைத்தாயின் மகனை தூக்கிக்கொண்டு நடக்கிறார்!
உள்ளூரில் என்ன தேவை என்று கேட்கிறார்!
ஆட்சிக்கு வந்தால் என்ன செய்யவேண்டும் என்று இளைஞர்களோடும் முதியவர்களோடும் திட்டமிடுகிறார்!

தமிழகத்தில் 234 சட்டமன்ற தொகுதிகளில் 103 தொகுதிகளில் நடைபயணம் மேற்கொண்டு மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்து நடவடிக்கை எடுத்து வருகிறார் மக்கள் தலைவர் அன்ணாமலை!

என் மண்! என் மக்கள்! என்பது நாம் ஒவ்வொருவரின் உரிமை மற்றும் கடமை குரல் என்கிறார் மக்கள் தலைவர்!

கூட்டம் கூட்டமாக மக்கள் வந்து தலைவரை சந்திக்கிறார்கள்!
பாட்டாளி மக்கள் கட்சியினரும் அதிமுகவினரும் அண்ணாமலையை பார்க்க அதிகமாக கூடுகிறார்கள் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அழுகிறார்!

உண்மையில் விடுதலை சிறுத்தை கட்சியினரும் அண்ணாமலை கூட்டத்தில் பெரும்பங்காக கலந்திருப்பதை அறிந்தபின்புதான் இந்த கருத்தை திருமாவளவன் சொல்லியுள்ளார்!

பக்கத்து இலைக்கு பாயாசம் வேண்டும் கேட்டு வாங்குங்கள் என்கிறார்! என் கட்சி தொண்டர்களும் ஓடுகிறார்கள் என்று எப்படி திருமாவளவன் சொல்ல முடியும்? உண்மை என்னவென்றால் எல்லா கட்சியினருமே அண்ணாமலை நடைபயணத்தில் திரளுகிறார்கள்!

வாராது என வந்த மாமணியாகவே அனைத்து கட்சி தொண்டர்களும் மக்கள் தலைவரை கருதுகிறார்கள்! கட்சி சார்பற்றவர்கள் மக்கள் தலைவரை துயரம் போக்கவந்த தூயவனாக கருதுகிறார்கள்! தமிழக அரசியல் வரலாற்றில் இப்படி நடந்தே சென்று மக்களை சந்தித்த தலைவர்கள் இல்லை!

தேசிய நெடுஞ்சாலையில் நடந்து போனவர்கள் உண்டு, இப்படி மக்களை சந்தித்தவர்கள் இல்லை! அவர்களெல்லாம் நடந்து போனபோது மக்களும் அவர்களை சந்திக்கவும் இல்லை!

ஆன்மீக தலைவர்களான அவதார புருசர்களான ஆதிசங்கரரும் ராமானுஜரும் நடந்தே சென்று மக்களுக்கு அருளினார்கள்! அன்று விளிப்புணர்வு என்னும் ஆன்மீகம் மக்களுக்கு தேவைப்பட்டது அதை அந்த அவதார புருசர்கள் மக்களுக்கு வழங்கினர்!

இன்று, மக்களுக்கு விழிப்புணர்வுடன் சேவையும் அரசியல் ஆளுமையும் தேவைப்படுகிறது! அதை வழங்கிடவே ஆதி சங்கரரைப்போல ராமானுஜரைப்போல நடை பயணமாக மக்கள் தலைவர் அன்ணாமலை வருவதாகத்தான் மக்கள் கருதுகிறார்கள்!

மக்களின் கருத்திற்கு இன்னும் வலு சேர்க்கும் வகையில் மக்கள் தலைவரின் திருச்சி திருவரங்கம் ஸ்ரீ ரங்கநாதர் பிரகடனம் அமைந்துள்ளது!
ஆம், திருவரங்கம் அரங்கநாதர் ஆலய வாசலில் வைக்கப்பட்டிருக்கும் இந்துவுக்கு எதிரான வாசகத்துடன் கூடிய சிலையை அப்புறப்படுத்துவோம்! அதை வைக்கவேண்டிய இடத்தில் வைப்போம்! என மக்கள் தலைவர் பிரகடணம் செய்தது, கன்னியாக்குமரி முதல் சென்னை வரை மட்டுமல்லாமல் காஷ்மீர்வரை மட்டுமல்லாமல் உலகம் முழுமையும் இந்தியர்களை ஈர்த்துள்ளது!

இந்த பிரகடனத்தை 1801 ல் மருது சகோதரர்கள் மேற்கொண்ட நாவல்தீவு பிரகடனத்தோடு ஒப்பிட்டது அருமையிலும் அருமை! ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிகளிலும் என்னென்ன மேம்பாட்டுபணிகள் செய்யப்படவேண்டும்! என்னென்ன அட்டூளியங்களை ஆளும்கட்சி உடனே தவிற்கவேண்டும், என பட்டியலிட்டு பேருரையாற்றுகிறார் மக்கள் தலைவர்!

நின்ற இடம், நடந்த இடம், உரையாற்றும் இடம் என எங்கெங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது! இந்த கூட்டம் ஓட்டாக மாறுமா மாறாதா என்பதுதான் மாற்றுக்கட்சி தலைவர்கள் ஒவ்வொருவரும் பார்க்கும் ஜோதிடமாக இருக்கிறது!

தமிழக தலைவர்கள் யாருக்குமே இருப்பு கொள்ளவில்லை! நெழிகிறார்கள்! தங்களின் கனவுகளை அன்ணாமலை தகர்த்துவிட்டாரே என ஆழாத குறைதான் அவர்களின் நிலை!

இந்த கூட்டமெல்லாம் ஓட்டாக மாறாது என சொல்லி தங்களுக்கு தாங்களே சமாதானமாகிக் கொள்கிறார்கள்! ஆனால், உண்மையில் வரும் கூட்டம் பாரதிய ஜனதா கட்சியின் வாக்காளர்களின் ஒரு சிறு பகுதியே!

மக்கள் தலைவரின் அரசியல் விளக்கங்களை சோசியல் ஊடகங்களில் பார்த்தவர்கள்தான், பிரதமர் நரேந்திரமோடியை சோசியல் மீடாக்களில் பார்த்து தெளிவடைந்தவர்கள்தான் கூட்டம் கூட்டமாக நடைபயணத்தில் கலந்துகொள்கிறார்கள்!

இவர்கள் அனைவருமே பாஜகவின் வாக்காளர்களேயன்றி பார்வையாளர்கள் அல்ல! கட்சி தொண்டர்களை பொறுத்தமட்டில் அந்த குறிப்பிட்ட சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்டவர்களே கலந்துக்கொள்கிறார்கள்!

பொதுமக்களும் அருகில் இருப்பவர்கள் மட்டுமே வந்து கலந்துக்கொள்கிறார்கள்! அருகில் இருக்கும் பாஜக வாக்காளர் பொதுமக்களின் கூட்டமே பிரமாண்டமாக இருக்கிறது என்பதுதான் உண்மை!

பெருந்தலைவர் காமராஜர், கருனாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோர் அரசியல் செய்த கால கட்டங்களில்-
”கூட்டம் வருகிறது ஆனால் ஓட்டாக மாறுமா?”
”வந்த கூட்டம் வாக்காக மாறவில்லையே!”
என்பது போன்ற கருத்துக்கள் நிலவியது உண்டு! அதில் உண்மையும் இருந்தது!
ஆனால், இப்போதைய காலம் வேறு! அந்த காலத்திற்கும் இந்த காலத்திற்கும் வித்தியாசம் உள்ளது!

அன்று, அப்போதுதான் அந்த தலைவர்களை கூட்டத்தில் மக்கள் பார்த்தார்கள் பேச்சை கேட்டார்கள்! பின்னர் அந்த தலைவர் பேசியதை சிந்தித்து சீர் தூக்கிப்பார்த்து வாக்களிக்கலாம், வாக்களிக்காமலும் இருக்கலாம்!
ஆனால் இன்று அப்படியல்ல, பேச்சையும் கருத்துக்களையும் சோசியல் மீடியாக்களில் கேட்டுப்பார்த்து முடிவு செய்துவிட்டுதான் கூட்டத்திற்கே வருகிறார்கள்!

அன்று இதுபோன்ற துரித செய்தி, சமூக ஊடக வாய்ப்புகள் இல்லை! எனவே ஓட்டாக மாறுமா? என்னும் கேள்வி மக்கள் தலைவர் விசயத்தில் எழவில்லை! வருவது அனைத்துமே வாக்குகளே!

திரிபுரா மாநிலத்தில் 2013ல் 1.5 விழுக்காடாக இருந்த பாரதிய ஜனதாகட்சியில் வாக்கு வங்கி 2018 ல் 45 விழுக்காடாக மாறியதோ அதே நிலையில் தமிழகத்திலும் பாரதிய ஜனதா கட்சியின் வாக்கு வங்கி ஏறத்தாள 10 சதவிகிதத்தில் இருந்து, 50 சதவிகிதத்தை எட்டும் என்பதுதான் உண்மை நிலவரமாக உள்ளது!

கடலுக்குள் மீன் பிடிப்பதற்காக மீனவர்கள் படகில் செல்வார்கள்!
செல்லும் இடத்தில் எவ்வளவு வேண்டுமானாலும் வாரிக்கொள்ளலாம் என்னும் அளவுக்கு மீன் கிடைத்துவிட்டது என்றாலும், இவர்கள் கொண்டு சென்ற படகின் கொள்ளளவை பொருத்தே இவர்களால் மீன்களை எடுத்துக்கொண்டு கரைக்கு வந்து சேரமுடியும்!

பாரதிய ஜனதா கட்சியின் தொண்டர்களின் வேகம் விவேகம் மற்றும் துரித நடவடிக்கைகளை பொறுத்து பாஜகவுக்கு பதிவாகும் வாக்குகள் அமையலாம்!
பாரதிய ஜனதா கட்சியின் வளர்ச்சியை கண்டு அஞ்சி நடுங்கிக்கொண்டிருக்கும் தமிழக கட்சி தலைவர்கள்,- உடனே பாஜக ஆட்சிக்கு வந்துவிடாது, 2031 ல் வரலாம், 2036 ல் பாஜக ஆட்சி அமையும் என்றெல்லாம் தங்களின் தோல்வியை தள்ளிப்போட்டு வருகிறார்கள்!

இது அப்பட்டமான பொய்யாகும்!
2024 ல் முழுமையான வெற்றி இல்லை எனினும், பத்து பதினைந்து எம்.பி.க்கள் தான் என வெற்றியின் வேகம் நின்றுவிட்டாலும், 2026 ல் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி அமைப்பது உறுதி என்னும் செய்தியைத்தான் நடைபயண மக்கள் கூட்டம் நமக்கு தருகிறது! எனத் தெரிவித்துள்ளார்.

Tags: k Annamalai Bjpannamalai en mann en makkal rallykumarikrishnan
ShareTweetSendShare
Previous Post

உலகக்கோப்பை கிரிக்கெட் : இந்தியா பேட்டிங் !

Next Post

“பொருளாதார நெருக்கடிக்கு ராஜபக்சே சகோதரர்கள் தான் காரணம்”

Related News

மும்பையில் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலம் – லால்பக்சா ராஜா விநாயகரை தரிசனம் செய்தார் ஜே.பி.நட்டா!

ஆபரேசன் சிந்தூர் நடவடிக்கையில் 50-க்கும் குறைவான ஆயுதங்கள் மட்டுமே பயன்படுத்தப்பட்டது – ஏர் மார்ஷல் நர்மதேஷ்வர் திவாரி

சேலம் மாவட்டத்தில் களைகட்டிய விநாயகர் ஊர்வலம் – 2000க்கும் மேற்பட்ட சிலைகள் கரைப்பு!

சென்னையில் கோலாகலமாக நடைபெற்ற விநாயகர் ஊர்வலம் – நீர்நிலைகளில் கரைக்கப்பட்ட சிலைகள்!

தமிழ்நாட்டின் பொறுப்பு டிஜிபியாக பதவியேற்பு – வெங்கட்ராமன் கடந்து வந்த பாதை!

தமிழக சட்டம்-ஒழுங்கு பொறுப்பு டிஜிபியாக வெங்கட்ராமன் பொறுப்பேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

தற்சார்பு பாரதம் உருவாக சுதேசி பொருட்களுக்கு முன்னுரிமை அளிப்போம் – நயினார் நாகேந்திரன்

தமிழக பொறுப்பு டிஜிபி நியமனம் – அண்ணாமலை கண்டனம்!

குற்றாலத்தில் சீரான நீர்வரத்து – சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி!

பிரிக்ஸ் அமைப்பை வலுப்படுத்த சீனாவுடன் இணைந்து செயல்படுவோம் : ரஷ்ய அதிபர் புதின் உறுதி!

தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை – தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி குற்றச்சாட்டு!

நாகை மீன்பிடி துறைமுகத்தில் மீன்களின் விலை உயர்வு!

திருவண்ணாமலையில் அண்ணாமலையாரை கூட்டமின்றி தரிசனம் செய்த பக்தர்கள்!

வரும் பண்டிகை காலங்களில் உள்நாட்டு தயாரிப்புகளை வாங்க வேண்டும் – பிரதமர் மோடி வேண்டுகோள்!

அம்பத்தூர் சிட்கோ சாலையில் போக்குவரத்து நெரிசல் – வாகன ஓட்டிகள் அவதி!

ஆண்டிபட்டி அருகே பேருந்து தாமதமாக வருவதற்கு எதிர்ப்பு – பொதுமக்கள் சாலை மறியல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies