அமெரிக்காவில் சிறிய விமானம் ஒன்று தரையிரங்கும் போது கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு வேலியை உடைத்துக்கொண்டு கார் மீது மோதியது.
டெக்சாஸ் மாநிலம், டல்லாஸ் அருகே மிட்லேண்டில் இருந்து வந்த சிறியரக விமானம் ஒன்று தரை இறங்க முற்பட்டது. அப்போது விமானியின் கட்டுப்பாட்டை இழந்த விமானம் ரன்வேயில் இருந்து விலகி அங்கு இருந்த தடுப்பை உடைத்து சென்று அங்கு வந்த கார் மீது மோதியது.
இதில் காரின் முன்பகுதி சேதம் அடைந்தது. விமானி, ஓட்டுநர் ஆகிய இருவரும் அதிர்ஷ்டவசமாக காயம் இன்றி உயிர் தப்பினர்.
இதுதொடர்பாக விமான போக்குவரத்து ஆணையம் விசாரணையை தொடங்கியுள்ளது. இதுதொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது.