மத்திய மேற்கு வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் மணிக்கு 13 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து செல்கிறது. விசாகப்பட்டினத்துக்கு 470 கிலோ மீட்டர் தென்கிழக்கில் தாழ்வு மண்டலம் மையம் கொண்டுள்ளது.
இதனால், கடலூரில் உள்ள தாழங்குடா பகுதியில் வழக்கத்தைவிடக் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. கடல் சீற்றம் காரணமாக 3-வது நாளாகக் கடலூர் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லவில்லை. கரையோரம் படகுகளைப் பாதுகாப்பாக நிறுத்திவைத்துள்ளனர்.
இதனிடையே, சென்னையில் இரவு முழுவதும் விட்டுவிட்டு கனமழை பெய்தது. சென்னைக்கு மஞ்சள் நில எச்சரிக்கை விடப்பட்டுள்ள நிலையில், இன்று காலை 8.30 மணி முதல் கோடம்பாக்கம், தி.நகர், மயிலாப்பூர், திருவல்லிக்கேணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது.