முதல் அரையிறுதி போட்டியில் இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்கள் இழப்பிற்கு 397 ரன்களை எடுத்துள்ளது.
ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் அரையிறுதி போட்டி இன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது.
இதில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் விளையாடுகிறது. இந்தத் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார்.
அதன்படி இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மா மற்றும் சுப்மன் கில் களமிறங்கினர். இதில் ரோஹித் சர்மா வழக்கம் போல் பவர் பிலேவில் தனது அதிரடியான ஆட்டத்தை தொடங்கினார்.
ரோஹித் சர்மா அடிக்கும் பந்து எல்லாம் சிக்சர்கள் மற்றும் பௌண்டரிசாக சென்றுக் கொண்டிருந்தன. இப்படி அதிரடியாக விளையாடி வந்த ரோஹித் சர்மா 9 வது ஓவரில் 29 பந்துகளில் 47 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.
இவரைத் தொடர்ந்து விராட் கோலி களமிறங்கினர். இவருடன் தொடக்க வீரராக விளையாடி வந்த கில் தனது ரன் வேட்டையை ஆரம்பித்தார்.
சிறப்பாக விளையாடி வந்த சுப்மன் கில்லுக்கு திடீரென காலில் அடிபட்டதால் ரிடைர் ஹுர்ட் மூலம் விளையாட்டை தொடர முடியாமல் வெளியேறினார்.
இவரைத் தொடர்ந்து ஸ்ரேயாஸ் ஐயர் களமிறங்கினார். ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் விராட் கோலி கூட்டணி மிகவும் சிறப்பாக செயல்பட்டு வந்தது.
ஆரபத்தில் இருவரும் நிதானமாக விளையாடினாலும் போக போக இருவரும் தங்களின் அட்டகாசமான ஆட்டத்தை காண்பித்தனர்.
விராட் கோலி ஒரு பக்கம் பௌண்டரிசாக அடித்து நொறுக்க, ஸ்ரேயாஸ் ஐயர் மறுபக்கம் சிக்சர்களாக வெளுத்து வாங்கினார்.
அப்போது விராட் கோலி தனது 50 வது சதத்தை அடித்து சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்தார். அதற்கு சச்சின் டெண்டுல்கரும் விராட் கோலியை கைதட்டி பாராட்டினார்.
பின்னர் விராட் கோலி 44 வது ஓவர் முடிய 9 பௌண்டரீஸ் மற்றும் 2 சிக்சர்கள் என மொத்தமாக 113 பந்துகளில் 117 ரன்களை அடித்து ஆட்டமிழந்தார்.
அடுத்ததாக விளையாடி வந்த ஸ்ரேயாஸ் ஐயர் 4 பௌண்டரீஸ் மற்றும் 8 சிக்சர்கள் என மொத்தமாக 70 பந்துகளில் 105 ரன்களை எடுத்து 49 வது ஓவரில் ஆட்டமிழந்தார்.
அடுத்ததாக களமிறங்கிய கே.எல்.ராகுல் 5 பௌண்டரீஸ் மற்றும் 2 சிக்சர்கள் என மொத்தமாக 20 பந்துகளில் 39 ரன்களை அடித்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
49 வது ஓவரில் களமிறங்கிய சூரியகுமார் யாதவ் 1 ரன்னில் ஆட்டமிழக்க அவரை தொடர்ந்து ரிடைர் ஹுர்ட் மூலம் வெளியேறிய கில் மீண்டும் களமிறங்கினார்.
இதில் கில் 8 பௌண்டரீஸ் மற்றும் 3 சிக்சர்கள் என மொத்தமாக 66 பந்துகளில் 80 ரன்களை எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
நியூசிலாந்து அணியில் அதிகபட்சமாக டிம் சவுத்தி 3 விக்கெட்களும், டிரெண்ட் போல்ட் 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இறுதியாக இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்கள் இழப்பிற்கு 397 ரன்களை எடுத்துள்ளது. 398 ரன்கள் நியூசிலாந்து அணிக்கு அரையிறுதியை வெற்றி பெரும் இலக்காக உள்ளது.